இயக்குனர் பாரதிராஜா பல வெற்றிப் படங்களை இயக்கியது மட்டுமின்றி அவர் பல படங்களில் நடித்தும் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார். நடிகராகும் ஆசையில் சென்னைக்கு வந்த அவர் பிறகு இயக்குனராக மாறியிருக்கிறார். கடந்த 1980ம் ஆண்டில் அவர் இயக்கிய கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் டைரக்டர் கேரக்டரிலேயே யே நடித்திருந்தார். இந்த படத்தில்தான் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தியை பாரதிராஜா அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து 2004ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் செல்வநாயகம் என்ற கேரக்டரில் அரசியல்வாதியாக பாரதிராஜா நடித்திருந்தார். சசீந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த பாண்டியநாடு என்ற படம் 2013ம் ஆண்டில் வெளியானது. இதில் விஷாலின் தந்தையாக கல்யாணசுந்தரம் என்ற கேரக்டரில் பாரதிராஜா நடித்திருந்தார்.
நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் 2017ம் ஆண்டில் வெளியான குரங்கு பொம்மை படத்தில் சுந்தரம் என்ற முதியவர் கேரக்டரில் நடிகர் விதார்த்தின் அப்பாவாக பாரதிராஜா நடித்திருப்பார். 2019ம் ஆண்டில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை என்ற படத்தில் அய்யனார் என்ற தாத்தா கேரக்டரில் பாரதிராஜா நடித்திருந்தார்.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் 2021ம் ஆண்டில் வெளியானது. இந்த படத்தில் குடும்பத்தின் பெரியவராக பெரியசாமி என்ற கேரக்டரில் பாரதிராஜா நடித்திருந்தார். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் அடுத்து 2022ம் ஆண்டில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷின் தாத்தாவாக பிரகாஷ்ராஜின் அப்பாவாக சீனியர் திருச்சிற்றம்பலமாக பாரதிராஜா நடித்திருந்தார்.
மேலும் 2023ம் ஆண்டில் வெளியான வாத்தி படத்தில் கிராமத்து பெரியவராக பாரதிராஜா நடித்திருந்தார். அதேபோல் மார்க் ஆண்டனி படத்தில் ஏகாம்பரம் என்ற கேங்ஸ்டர் தலைவராகவும் அதே ஆண்டில் வெளிவந்த கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தில் ஓய்வு பெற்ற நீதிபதியாக எஸ். ராமநாதன் என்ற கேரக்டரில் பாரதிராஜா நடித்திருந்தார். மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடித்த தொடரும் என்ற படத்தில் அவரது ஸ்டண்ட் மாஸ்டராக பாரதிராஜா சில காட்சிகளில் நடித்திருந்தார்.
மேலும் இயக்குனர் முருகைய்யா இயக்கத்தில் அவர் கடைசியாக நடித்த புலவர் என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக அவர் நடித்துள்ளார். பாரதிராஜான் சிஷ்யர் கே பாக்யராஜ் இயக்கிய தாவணிக்கனவுகள் என்ற படத்தில் சில காட்சிகள் அவர் இயக்குனராக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





