- Advertisement -
Homeபொழுதுபோக்குவிண்வெளி நாயகா பாடலை பாடியிருப்பது படத்தில் நடித்திருக்கும் இந்த பிரபலத்தின் மகளா... தக் லைப் திரைப்படத்தின்...

விண்வெளி நாயகா பாடலை பாடியிருப்பது படத்தில் நடித்திருக்கும் இந்த பிரபலத்தின் மகளா… தக் லைப் திரைப்படத்தின் தக் ஆன மொமண்ட் ரெடி…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது தக் லைப் திரைப்படம். இதற்கு மிக முக்கிய காரணம், கமல்ஹாசனும் மணிரத்னமும் மீண்டும் இணைந்திருக்கும் அந்த மாயாஜால கூட்டணி தான். இருவரும் சேர்ந்து கொடுத்த, நாயகன் திரைப்படத்தை நம்மில் யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.

34 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படம், தமிழ் சினிமாவில் இன்றைக்கு வரை எந்த ஒரு படமும் தொட முடியாத ஒரு உச்சமென்றே கூறலாம். அந்த அளவுக்கு அந்த திரைப்படத்தை செதுக்கி இருப்பார்கள். இளையராஜாவின் இசையும், சக்திவேல் நாயக்கராக நடித்திருக்கும் கமல்ஹாசனின் நடிப்பும், மணிரத்னத்தின் இயக்கமும் இங்கு பலரை மெய்சிலிர்க்க வைத்தது.

தற்போதுவரை இந்தத் திரைப்படம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கிறது. இப்படியான சூழலில்தான், மீண்டும் இந்த கூட்டணி கைகோர்த்துள்ளது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகியவை இதற்காக கைகோர்த்துள்ளனர்.

தக் லைஃபில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சிம்பு. திரிஷா, அசோக் செல்வன், நாசர், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ் என வலுவான கூட்டணி இதில் இணைந்திருக்கிறது. படத்தில் கமல்ஹாசன் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காயல்பட்டினத்துக்காரராக வரும் அவர், தூத்துக்குடி வட்டார வழக்கு மொழியை பயன்படுத்தியுள்ளார்.

அண்மையில் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு நடிப்பது உறுதியாக காட்டப்பட்டிருந்தது. பெரிய கேங்ஸ்டர் ஆக நடித்திருக்கிறார் கமல்ஹாசன். அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ, அந்த இடத்தை சிம்பு பிடிக்க ஆசைப்படுவதாக ட்ரெய்லரில் காட்டப்பட்டிருந்தது.

ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து, ஜிங்குச்சா மற்றும் சூப்பர் பேபி ஆகிய பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த நிலையில் பலரையும் முணுமுணுக்க வைத்திருக்கும் விண்வெளி நாயகா பாடல், விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏ ஆர் ரகுமான் இசையில் இந்த திரைப்பட பாடலை கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் பாடியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்தப் பாடலின் மீது இன்னும் எதிர்பார்த்து கூடியிருக்கிறது. வரும் ஐந்தாம் தேதி தக் லைப் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

சற்று முன்