- Advertisement -
Homeபொழுதுபோக்குஸ்ருதிஹாசனுடன் இணைந்திருந்த போஸ்டரின் பின்னணி இதுதானாம்... வேற லெவலில் பெர்ஃபார்மன்ஸ் பண்ணப் போகும் லோகேஷ்...

ஸ்ருதிஹாசனுடன் இணைந்திருந்த போஸ்டரின் பின்னணி இதுதானாம்… வேற லெவலில் பெர்ஃபார்மன்ஸ் பண்ணப் போகும் லோகேஷ் கனகராஜ்…

- Advertisement -

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய ஐந்து திரைப்படங்களை இயக்கியதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்திய சினிமாவில், தனக்கென தனி மார்க்கெட்டை பிடித்து இருக்கும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆரம்பத்தில் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்த லோகேஷ் கனகராஜ், அந்த வேலையை உதறிவிட்டு சினிமாக்கனவுடன் சென்னைக்கு வந்திருக்கிறார்.

திரை மொழியில் லோகேஷ் கனகராஜின் படங்கள் மிகப் பெரிய அளவில் பேசியதால், அவரின் கிராஃப் வேறு லெவலில் உயர்ந்துள்ளது. குறிப்பாக அவர் விக்ரம் திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய என் சி யூ கான்செப்ட் மூலம் பரபரப்பாக பேசப்பட்டார். கைதி திரைப்படத்தின் சில காட்சிகளை விக்ரமில் இணைத்து இருந்த அவர், அதனை சுவாரசியமாக எடுத்து புகழ் பெற்றார்.

- Advertisement -

அந்த திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் சூர்யா வந்ததும் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது. இதைத்தொடர்ந்து அவர் இயக்கிய லியோ திரைப்படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது ரஜினியை வைத்து படம் எடுக்கும் பணியில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த திரைப்படம் தனது முந்தைய திரைப்படங்களைப் போல் இருக்காது என்றும் சோதனை முயற்சியாக இந்த திரைப்படத்தை எடுப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் பல்வேறு நட்சத்திரங்கள் இடம் போற போவதாகவும், இது குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். படத்தின் சூட்டிங் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் அதனை எஸ்கே மறுத்துவிட்டார். இப்படியான சூழலில் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை நடிக்க வைக்கும் முயற்சியில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படி பிசியாக இருக்கும் அவர் திடீரென ஸ்ருதிஹாசன் உடன் இணைந்திருப்பது போன்ற போஸ்டர் வெளியாகி இருந்தது. அதனை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமே வெளியிட்டது. இந்த போஸ்டர் மூலம் என்ன கூற வருகிறார் என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போயிருந்தனர்.

இப்படியான சூழலில் அதற்கு விடை கிடைத்துள்ளது. புதுமையான ஆல்பம் பாடலை ஸ்ருதிஹாசன் எழுதி இசையமைத்துள்ளாராம். இந்தப் பாடலைக் கேட்டதும் அதில் நடிக்க உடனே சம்மதித்து விட்டாராம் லோகேஷ் கனகராஜ். இதற்காக இரண்டு நாட்கள் சூட்டிங் பணிகள் நடைபெற்ற நிலையில், அது நேற்று நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் காதலர் தினத்தன்று இந்த ஆல்பம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. பாடலில் ஒரு வேளை லோகேஷ் கனகராஜ் ரொமான்ஸ் செய்திருப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில் அதனை காண ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்