- Advertisement -
Homeபொழுதுபோக்குபாஜக வை கடுமையாக விமர்சிக்கும் தவெக தலைவர், பாஜக மாநில துணைத்தலைவர் நடிகை குஷ்பு சொன்ன...

பாஜக வை கடுமையாக விமர்சிக்கும் தவெக தலைவர், பாஜக மாநில துணைத்தலைவர் நடிகை குஷ்பு சொன்ன அதிரடி பதில்

- Advertisement -

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக தமிழக அரசியல் களத்தில் இருந்து வருகிறார். திமுகவை தனது அரசியல் எதிரி என்றும் பாயாசம் என்றும் விமர்சிக்கும் விஜய், பாஜக அரசை தனது கொள்கை எதிரி என்றும் பாசிசம் என்றும் தொடர்ந்து கடுமையாக வசைபாடி வருகிறார். திமுக, பாஜகவை ஆகிய 2 கட்சிகளையும் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் எதிர்த்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் நடிகை குஷ்பு இப்போது பாஜக மாநில துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்பு பாஜகவில் அவர் தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருந்தார். நடிகர் விஜயுடன் நடிகை குஷ்பு மின்சார கண்ணா உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இப்போது தமிழக அரசியல் களத்தில் மாநிலத் துணைத் தலைவராக குஷ்பு உள்ள நிலையில், விஜய்க்கு எதிராக நிற்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நடிகை குஷ்பு கூறியதாவது, பாஜக குறித்து விமர்சனம் செய்கிற நடிகர் விஜய்க்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. நாம நம்ம வேலையை மட்டும் செஞ்சா போதும். மக்களே பதில் கொடுத்துடுவாங்க, விஜய் அவர்கள் இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

முதல் முறையாக அவர் இன்னும் ஒரு தேர்தலை கூட இன்னும் சந்தித்தது கிடையாது. இப்போதுதான் அவர் தன்னுடைய கட்சியில் வந்து அனைவரும் சேர வேண்டும் என்று ஒரு டிரைவ் ஆரம்பித்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். வெளியில் இருந்துட்டு இது நடக்கலே அது நடக்கலே நீட் பத்தி மட்டும் பிளைம் பண்ணி பேசிட்டு இல்லாமல், அவர் களத்தில் இறங்கி வேலை பார்க்க தயாராக இருப்பதால் அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

- Advertisement -

விஜயை பொருத்த வரை நீண்டகாலமாக எனக்கு விஜயை நன்றாக தெரியும். அவர் எனக்கு தம்பி மாதிரி. தம்பி என்று தான் விஜயை நான் சொல்வேன். அவரும் என்னை பார்க்கும்போது அக்கா என்றுதான் சொல்வார். அதனால் அவர் எனக்கு தம்பி முறையில் விஜய் இருக்கிறார். எதிர்கட்சியில் இருந்தாலும் வேற கட்சியில் இருந்தாலும் சொந்தமான ஒரு கட்சியில் எங்களை எதிர்க்கிற மாதிரி இருந்தாலும் பரவாயில்லை.

அவர் மீது எனக்கு இருக்கிற அன்பு மரியாதை எப்பவும் அப்படியே இருக்கும். அவர் வந்து இப்போதான் அரசியலில் இறங்கி இருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். நாளைக்கு என்ன நடக்கப் போகுது, அதை நாளைக்கு பார்ப்போம் என்று நடிகை குஷ்பு தவெக தலைவர் விஜய் குறித்து பேசியிருக்கிறார். குறிப்பாக நடிகர் விஜயை தனது தம்பி என குஷ்பு பேசியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்