நயன்தாரா தற்போது தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் தட்டி சென்ற நயன்தாரா, தற்போது தமிழில், “டெஸ்ட்”, Nayanthara 75” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதே போல் ஹிந்தியில் ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

அதே போல் ஸ்ருதிஹாசனும் தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வருகிறார். தற்போது கேஜிஎஃப் இயக்குனர் இயக்கி வரும் “சலார்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே போல் ஹாலிவுட்டில் “தி ஐ” என்ற படத்திலும் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஸ்ருதிஹாசனின் வாய்ப்பை நயன்தாரா பறித்துக்கொண்டதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு நயன்தாரா, ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “மூக்குத்தி அம்மன்”. இத்திரைப்படத்தை ஆர் ஜே பாலாஜி, என் ஜே சரவணன் ஆகியோர் இயக்கியிருந்தனர். வேல்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்க ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியானது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் அம்மன் ரோலுக்காக முதலில் ஸ்ருதிஹாசனிடம்தான் ஆர்ஜே பாலாஜி கதை கூறியிருந்தாராம். அந்த சமயத்தில் தற்செயலாக ஆர் ஜே பாலாஜியை சந்தித்த நயன்தாரா, “எனக்குலாம் கதை சொல்ல மாட்டீங்களா?” என கேட்டாராம். ஆதலால் ஸ்ருதிஹாசனுக்கு கூறிய கதையை நயன்தாராவிடம் கூறினாராம்.
அந்த கதையை கேட்ட நயன்தாராவிற்கு மிகவும் பிடித்துப்போனதாம். ‘நானே இத்திரைப்படத்தில் அம்மனாக நடிக்கிறேன்” என கூறினாராம். இவ்வாறுதான் நயன்தாரா இந்த புராஜெக்ட்டிற்குள் வந்திருக்கிறார். மூக்குத்தி அம்மனாக நயன்தாரா மிகவும் சிறப்பாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





