நடிகர் கமல்ஹாசன் பல படங்களில் பல கேரக்டரில் நடித்திருந்தாலும் சில கேரக்டர்கள் அவரது வாழ்வில் ஒன்றாக கலந்துவிட்டதாகவே சொல்லலாம். குறிப்பாக 16 வயதினிலேயே சப்பாணி கமல், அபூர்வ சகோதர்கள் அப்பு கமல், அவ்வை சண்முகி மாமி கமல், இந்தியன் தாத்தா கமல், குணா கமல் என இந்த கேரக்டர்கள் கமலின் திரை பயணத்தில் மிக மிக முக்கியமானவையாக இருக்கின்றன.
இதில் இந்தியன் தாத்தாவாக கமல், 1996ம் ஆண்டில் ரசிகர்களை சந்தித்த நிலையில், 2ம் முறையாக மீண்டும் இந்தியன் 2 படத்தில், ஜூலை 12ம் தேதி ரசிகர்களை சந்திக்க வருகிறார். அதே போல் இந்தியன் 3 படத்திலும், இந்தியன் தாத்தா தனது பயணத்தை தொடர்கிறார். இந்தியன் 4, இந்தியன் 5 படங்களின் வருகையை, இந்தியன் 2 மற்றும் 3 படங்கள்தான் தீர்மானிக்க போகின்றன.
இப்போது 70வயதுகளை நெருங்கும் கமலுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர். நடன நடிகை வாணி கணபதியை முதல் திருமணம் செய்த கமல், அவரை விவகாரத்து செய்துவிட்டு 2வது திருமணம் செய்தது குஜராத்தி நடிகை சரிகாவை. அவருக்கும், கமலுக்கும் பிறந்த பெண் பிள்ளைகள்தான் ஸ்ருதி, அக்ஷரா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் தாத்தாவாக ரசிகர்கள் மத்தியில் தோன்றும் நடிகர் கமலுக்கு நிஜத்தில் 70 வயது நெருங்குவதால் அவரது மகள்களுக்கு காலாகாலத்தில் திருமணம் நடந்திருந்தால் உண்மையில் அவர் தாத்தா ஆகியிருப்பார். பேரன், பேத்திகளுக்கு வருங்காலத்தில் திருமணமானால் அப்போது கொள்ளுத்தாத்தா கூட கமல் ஆகியிருப்பார்.
ஆனால் 40 வயதுகளை நெருங்கும் நிலையிலும் கமலின் மகள்கள் இருவரும் இன்னும் திருமணம் குறித்த எந்த ஐடியாவும் உள்ளனர். சில ஆண் நண்பர்களுடன் லிவிங் டூ ரிலேசன்ஷிப் முறையில், தாலி கட்டாமல் குடும்பம் நடத்திய ஸ்ருதிஹாசன், தனது அனுபவத்தில் திருமணமே வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார். அக்ஷரா ஹாசனும் அக்கா வழியில் செல்வார் என்றே தெரிகிறது. இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல், ஸ்ருதி மனம் வைத்தால், உண்மையில் நான் தாத்தா தான், என்று தனது ஆசையை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் சாட் செய்த நடிகை ஸ்ருதிஹாசன், உனக்கு கல்யாணம் எப்போ, என்ற எரிச்சலூட்டும் கேள்விகளை திரும்ப கேட்காதீர்கள். நான் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன். இது 2024, பெண்களிடம் இது மாதிரியான அறிவற்ற, தேவையற்ற கேள்விகள் கேட்பதை எப்போது நிறுத்தப் போறீங்க என்று பதில் தந்திருக்கிறார். இதன்மூலம், நிஜத்தில் தாத்தா ஆகும் கமல்ஹாசனின் கனவு கடைசி வரை நிறைவேறாது என்பது தெளிவாகி விட்டது.





