- Advertisement -
Homeபொழுதுபோக்குகன்னட அமைப்புகளால் வெளியேற்றப்பட்ட சித்தார்த்... பெங்களூர் சம்பவம் குறித்து முதல் முறையாக பேசிய நடிகர்... என்ன...

கன்னட அமைப்புகளால் வெளியேற்றப்பட்ட சித்தார்த்… பெங்களூர் சம்பவம் குறித்து முதல் முறையாக பேசிய நடிகர்… என்ன சொல்லி இருக்காருன்னு தெரியுமா…

- Advertisement -

பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அங்கிருந்து மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் நடித்த அவர், தெலுங்கு திரைப்பட உலகிற்கு சென்றார். அங்கு குறிப்பிட்டத்தக்க வெற்றிகளை பதிவு செய்த சித்தார்த், நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் 180 திரைப்படத்தில் நடித்தார்.

பின்னர் காதலில் சொதப்புவது எப்படி, உதயம் திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன. இதில் ஜிகர்தண்டா திரைப்படம் சித்தார்த்திற்கு மிக முக்கியமான திரைப்படம் என்று கூறலாம். ரவுடிக்கும் இளம் இயக்குனருக்குமான மோதலை குறி வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு பெற்றது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து காவியத்தலைவன், அவள், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தற்போது வெளியாகி இருக்கும் சித்தா படத்தில் நடித்து பாராட்டைப் பெற்று இருக்கிறார். குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமையை சொல்லி இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பாராட்டை பெற்று வருகிறது.

இந்தப் படத்தின் ப்ரோமோஷனிற்காக சித்தார்த் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது திடீரென உள்ளே புகுந்த கன்னட அமைப்புகள், நடிகரை பேசவிடாமல் தடுத்தன. மேலும் காவிரி விவகாரத்தால் இங்கு பெரும் புகைச்சல் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சி தேவைதானா என்றும் அவர்கள் தகராறு செய்தனர். பதிலுக்கு சித்தார்த் எதுவும் பேசாமல், நிகழ்ச்சியை பாதியிலேயே முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

- Advertisement -

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், அனைத்து கன்னடர்கள் சார்பில் தான் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். அதேபோல் கன்னட திரை உலகம் சார்பில் தான் மிகுந்த வருத்தத்தை பதிவு செய்வதாகவும் நடிகர் சிவராஜ்குமார் பேசினார். இனி இது போல் நடக்காது என்றும் அவர் உறுதி அளித்தார். இந்த நிலையில், பெங்களூருவில் தான் பாதியிலேயே வெளியேற்றப்பட்டது தொடர்பாக சித்தார்த் முதல் முறையாக பேசியிருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது, ஒரு நல்ல படத்தை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் பேச முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. காவிரி பிரச்சனை காரணமாக அங்கு திட்டமிட்டு இருந்த நிகழ்ச்சிகளை ஏற்கனவே ரத்து செய்தோம். ஆனால் அங்கு கேமராக்களுக்கு முன்னால் நடந்ததை பற்றி நான் பேச விரும்பவில்லை. காவிரி பிரச்சனைக்கும் எனது படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் தயாரிக்கும் பணிகளில், சமூகப் பொறுப்பு இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார். சித்தார்த்தின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்