விஜய் தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நடிகராக தற்போது திகழ்ந்து வருகிறார். அவருக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, போன்ற மாநிலங்களிலும் கூட விஜய்க்கு ரசிகர்கள் பலர் உண்டு. குறிப்பாக கேரளாவில் தமிழ்நாட்டை போலவே அதிக ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவரது திரைப்படங்கள் கேரளாவில் வெளியாகும்போது மம்முட்டி, மோகன்லால் திரைப்படங்களுக்கு எந்தளவு வரவேற்பு இருக்குமோ அந்தளவுக்கு கொண்டாடப்படும். இவ்வாறு விஜய் மிக புகழ் பெற்ற நடிகராக திகழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகர் சித்தார்த், விஜய்யை குறித்து ஒரு அதிர்ச்சியான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். நடிகர் சித்தார்த் சினிமாவுக்குள் இயக்குனராக ஆக வேண்டும் என்ற ஆசையோடுதான் காலடி எடுத்து வைத்தார். இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அவர், அதன் பின் ஷங்கரின் “பாய்ஸ்” திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து தமிழில் “ஆய்த எழுத்து”, “180”, “காதலில் சொதப்புவது எப்படி?”, “உதயம் என் ஹெச் 4”, “தீயா வேலை செய்யணும் குமாரு” ஆகிய பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட இவரது நடிப்பில் “டக்கர்” என்று ஒரு திரைப்படம் வெளியாகியிருந்தது.

சித்தார்த் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அப்பேட்டியில் பேசிய சித்தார்த், “நான் விஜய்யை பெயர் விட்டுத்தான் கூப்பிடுவேன். ஆனால் உலகமே மாறிவிட்டது. இப்போது அவர் பெரிய நடிகர் ஆகிவிட்டதால் அப்படி கூப்புடுவது சிலருக்கு பிடிப்பதில்லை. எங்களுக்குள் ஒரு நல்ல நட்பு உள்ளது. நான் அவரை எப்போது பார்த்தாலும் கட்டிப்பிடித்துக்கொண்டு வெகு நேரம் இருப்பேன். எனக்கு அவரை அவ்வளவு பிடிக்கும்” என்று கூறியிருக்கிறார்.





