- Advertisement -
Homeபொழுதுபோக்கு4 நாட்களில் படத்தின் ஒட்டுமொத்த வசூலே இவ்வளவுதானா? விஜய் மகன் இயக்கிய சிக்மா படத்தை கண்டுக்காத...

4 நாட்களில் படத்தின் ஒட்டுமொத்த வசூலே இவ்வளவுதானா? விஜய் மகன் இயக்கிய சிக்மா படத்தை கண்டுக்காத ரசிகர்கள் – சரக்கு இல்லாம படம் எடுத்தா இப்படித்தானோ?

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் வணிகரீதியாக உச்ச நடிகராக இருந்த நட்சத்திரம். இவர் நடிகர் கமல்ஹாசனை போல நடிகர் சியான் விக்ரமை போல நடிப்பில் பல பரிமாணம் காட்டி நடித்தவர் இல்லை. நல்ல இயக்குனர்களின் காதல் கதைகளால் ஆரம்பத்தில் ரசிகர்களின் மத்தியில் அடையாளம் பெற்றவர். பூவே உனக்காக காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் விஜய்க்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன.

ஆனால் திருமலை படத்துக்கு பிறகு கமர்ஷியல் ரீதியாக ஆக்சன் படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு நடிகர். அதனால் தான் 69 படங்களில் நடித்தும் விஜய் ஒரு தேசிய விருது கூட பெறவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் அதிக லாபம் தரும் வணிக படங்களால் அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற நிலையில் இருந்தவர்.

- Advertisement -

இந்த நிலையில் அரசியலுக்கு வந்த அவர் சந்தித்த முதல் சட்டசபை தேர்தலிலேயே 108 இடங்களில் வென்று தமிழக முதல்வராகி விட்டார். ஆனால் 4 மாதங்களில் மிக மோசமான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வரும் முதல் தமிழக முதல்வர் விஜய்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேடையில் பேசியது எல்லாம் காற்றில் பறக்க விட்ட விஜய் என்ற விமர்சனத்தை சந்தித்து வருகிறார்.

இதற்கிடையே விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். ஏற்கனவே குறும்படங்கள் சில இயக்கியவர். வெளிநாட்டில் சினிமா டைரக்‌ஷன் குறித்த பாடம் பயிற்சி கற்றவர் என்ற நிலையில் இவரது படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

கடந்த 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று சிக்மா படம் வெளியானது. லைகா புரடக்சன்ஸ் தயாரித்த இந்த படத்தின் ஹீரோவாக தெலுங்கு நடிகர் சந்தீப் கீஷன் நடித்துள்ளார். ஃபரியா அப்துல்லா நாயகியாக நடித்துள்ளார். எதிர்பார்த்த அளவுக்கு இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. வழக்கமான ஆக்சன் படமாக தான் உள்ளது. சண்டை காட்சிகள் ஒளிப்பதிவு மேக்கிங் என தொழில்நுட்பம் படத்தில் பேசினாலும் ஒரு இயக்குனராக கதை திரைக்கதையில் ஜேசன் சஞ்சய் ஏமாற்றி விட்டதாகவே ரசிகர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

எப்போதுமே கதைக்களம்தான் ஒரு திரைப்படத்தை வெற்றி பெற வைக்கிறது. அப்படி தான் தாய்கிழவி சிறை சமீபத்தில் வெளியான மொத ராத்திரி பத்தா போன்ற படங்களை ரசிகர்கள் கொண்டாடினர். அந்த வரிசையில் சரக்கே இல்லாத சிக்மா படத்தை ரசிகர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்த படம் வெளியான 4 நாட்களில் உலகளவில் ஒட்டுமொத்தமாக ரூ. 6.5 கோடி மட்டுமே வசூலித்து லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு பலத்த நஷ்டத்தை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்