- Advertisement -
Homeபொழுதுபோக்குமணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான தக்லைப், லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த சிம்பு -...

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான தக்லைப், லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த சிம்பு – போடு வெடிய… அடிச்சு கௌப்பறாங்கப்பா!

- Advertisement -

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய நாவலை மையப்படுத்தி 2 பாகங்களாக இந்த படத்தை மணிரத்னம் எடுத்திருந்தார். முதல் பாகம் பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்ட நிலையில், 2ம் பாகம் பலத்த ஏமாற்றத்தை தந்தது. முதல் பாகம் போல வெற்றி பெறவில்லை.

இதையடுத்து கடந்த ஜனவரி முதல் தக்லைப் என்ற படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துள்ளார். சிலம்பரசன், திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

தக்லைப் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளன. தக்லைப் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் சென்னையில் துவங்கியது. தொடர்ந்து செர்பியா, டெல்லி ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டது.

இந்நிலையில் தக்லைப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வழக்கமாக அதிகபட்சம் 3 மாதங்களில் படப்பிடிப்பை முடித்து விடும் மணிரத்னம், இந்த முறை தக்லைப் படப்பிடிப்புக்காக ஏழு மாதங்கள் வரை நீடிக்க காரணம், திரைக்கதையில் செய்த மாற்றங்கள்தான் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் இந்த படத்தில் முதலில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் இந்த படத்தில் நடிக்க மாட்டோம் என்று விலகி விட்டனர். அதற்கு முக்கிய காரணம், மணிரத்னம் தரும் அடிமாட்டு சம்பளம்தான் என்றும் கூறப்படுகிறது. ஒரு படத்தில் நடிக்க 10 கோடி சம்பளம் வாங்கும் நடிகர் என்றால், மணிரத்னம் அவருக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் தருவதுதான் வழக்கமாம்.

ஜெயம் ரவி, துல்கர் சல்மான் படத்தில் இருந்து விலகியதால் அவர்கள் இல்லாத ஒரு தக்லைப் கதையை மீண்டும் எழுதி இயக்கியதால், அதிக தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே நடிகர் சிலம்பரசன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதில், தக்லைப் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை தெரிவித்துள்ளார். அந்த ஸ்டோரியில், தக்லைப் படத்தின் டப்பிங் பணிகளை துவங்கி விட்டதாக அறிவித்துள்ளார். அதனால் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

சற்று முன்