- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் கூட நிறைய படங்களில் நடித்திருக்கிறேன் அந்த ஒரு விஷயத்துல விஜய் ரொம்ப கறாராக இருப்பார்...

விஜய் கூட நிறைய படங்களில் நடித்திருக்கிறேன் அந்த ஒரு விஷயத்துல விஜய் ரொம்ப கறாராக இருப்பார் – சீனியர் நடிகர் சார்லி சொன்ன அந்த விஷயம்…

- Advertisement -

நடிகர் சார்லி குறித்து சொல்வதென்றால், தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகச் சிறந்த நடிகர்களில் அவரும் ஒருவர். காமெடி, குணச்சித்திரம் என எந்த கேரக்டராக இருந்தாலும் அவரது தனித்துவம் அதில் வெளிப்படும். தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் சீனியர் நடிகர்களில் ஒருவர்.

நடிகர் விஜயுடன் காதலுக்கு மரியாதை, பிரண்ட்ஸ், பூவே உனக்காக. நிலாவே வா, கண்ணுக்குள் நிலவு, ஒன்ஸ்மோர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அதுமட்டுமின்றி பல படங்களில் ஹீரோவுக்கு நண்பனாக, நண்பர் குழுவில் ஒருவராக சார்லி இருப்பார்.

- Advertisement -

விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தில், கோபால் கேரக்டரில் சார்லி நடிப்பு மிகவும் பாராட்டை பெற்றது. அதாவது, சாண்ட்லியர் லைட் தலையில் விழுந்து, நினைவுகளை மறந்து விடுவார். பின், நினைவு இல்லாதவராக நடிக்கும் அந்த கேரக்டரை, சார்லியின் நடிப்புக்காகவே அந்த படத்தின் இயக்குநர் சித்திக் உருவாக்கினார். மலையாளத்தில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படத்தில், புதியதாக சார்லிக்காகவே அந்த கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகர் சார்லி, மிகையான நடிப்பை வெளிப்படுத்த மாட்டார். முதலில் ஹீரோக்களின் நண்பராக நடித்து வந்த சார்லி, சமீபமாக ஹீரோக்களின் தந்தையாக நடித்து வருகிறார். அதனால், தமிழ் படங்களில் அவரை அடிக்கடி காண முடிகிறது. மற்ற மொழி படங்களிலும் சார்லி நடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில், நடிகர் சார்லி நடிகர் விஜய் குறித்த தனது அபிப்ராயத்தை தெரிவித்து இருக்கிறார். அதாவது பணத்தை கண்டபடி செலவு செய்யக் கூடாது. பணத்தின் அருமை, அது இல்லாத போதுதான் புரியும். அதேபோல் நேரத்தையும் வீணாக்க கூடாது. நேரம் என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது.

அதுபோல் விஜயிடம் இருந்து நான் பார்த்துக் கற்றுக்கெகாண்ட விஷயம், அவரது பக்குவம். அவர் பேசும் வார்த்தைகளில் எப்போதும் நிதானம், பொறுமை இருக்கும், அவசியமற்ற வார்த்தைகளை ஒரு போதும் அவர் பேசி நான் பார்த்தது இல்லை. எமோஷனலான நேரங்களில் கூட வார்த்தைகளை மிக கவனமாக வெளியிடுவார். அதை அருகில் இருந்து பார்த்து, பலமுறை வியந்திருக்கிறேன் என கூறியிருக்கிறார் நடிகர் சார்லி.

- Advertisement -

சற்று முன்