- Advertisement -
Homeபொழுதுபோக்குதேசிங்கு பெரியசாமி உடனான திரைப்படத்தை நானே தயாரிப்பதற்கு இது தான் காரணம்... சூப்பராக சொன்ன சிலம்பரசன்......

தேசிங்கு பெரியசாமி உடனான திரைப்படத்தை நானே தயாரிப்பதற்கு இது தான் காரணம்… சூப்பராக சொன்ன சிலம்பரசன்… பாராட்டும் ரசிகர்கள்…

- Advertisement -

சிலம்பரசன் நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக திரைப்படங்கள் எதுவும் வெளிவரவில்லை. தற்போது அவர் தக் லைப் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். மணிரத்னம் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கமல்ஹாசன். திரிஷா கதாநாயகியாக வருகிறார்.

அசோக் செல்வன், அபிராமி, நாசர் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிம்புவுக்கு மிக முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதால், அவனை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்கும் திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு அவரது பிறந்த நாளை முன்னிட்டு அடுத்தடுத்து வெளியானது. இதில் சிலம்பரசனின் 49 வது திரைப்படத்தை இயக்குகிறார் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். பார்க்கிங் திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த இவர், தற்போது எஸ்டிஆர் உடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.

இன்ஜினியரிங் படிக்கும் ஒரு மாணவர் கேங்ஸ்டர் ஆக இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு சின்ன கான்செப்ட்டை மையமாக வைத்து தான் இதன் திரைக்கதை எழுதப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை உறுதிப்படுத்தும் விதமாகவே படத்தின் போஸ்டரும் அமைந்துள்ளது. இதேபோல் சிம்புவின் 51-வது திரைப்படத்தை அஸ்வந்த் மாரிமுத்து இயக்குகிறார்.

- Advertisement -

இவரது முதல் திரைப்படம் ஆன ஓ மை கடவுளே ஃபேண்டஸி கலந்த காமெடி திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கும். இதுவும் அதே பாணியில் தான் உருவாக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காட் ஆப் லவ் என்று குறிப்பிட்டு இதன் போஸ்டர்களும் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில் தனது ஐம்பதாவது திரைப்படத்தை சிலம்பரசனே தயாரிக்கிறார்.

தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்த திரைப்படத்தை முதலில், ராஜ் கமல் பிலிம்ஸ் எடுப்பதாகத் தான் இருந்தது. ஆனால் அதீத பட்ஜெட் காரணமாக விலகியதால் தற்போது சிம்புவே அதனை தயாரிக்க முடிவு செய்து இருக்கிறார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிலளித்திருக்கும் அவர், நாங்கள் பாகுபலி போன்று ஒரு படத்தை எடுக்கவில்லை. ஆனால் நிச்சயமாக இந்த திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும். இந்த திரைப்படத்தின் குவாலிட்டி குறைய கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதில் ரிஸ்க்கான காரணங்கள் நிறைய இருப்பதாக மற்ற தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்கள். அதன் காரணமாகவே இந்த படத்தை நான் தயாரிக்க முன்வந்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்