- Advertisement -
Homeபொழுதுபோக்குஎதுக்கு வம்பு என்று ஒதுங்கிக்கொண்ட கமல், துணிச்சலுடன் கையில் எடுத்த நடிகர் சிம்பு, தரமான சம்பவத்துக்கு...

எதுக்கு வம்பு என்று ஒதுங்கிக்கொண்ட கமல், துணிச்சலுடன் கையில் எடுத்த நடிகர் சிம்பு, தரமான சம்பவத்துக்கு தயாரான எஸ்டிஆர் – போடு வெடிய, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிலம்பரசன். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிறகு இப்போது முன்னணி நடிகராக படங்களில் நடித்து வருகிறார். டிஆர் எனப்படும் இயக்குனர் டி ராஜேந்தரின் மூத்த மகன் சிலம்பரசன் என்கிற சிம்பு, குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் அவரது தந்தையின் படங்களில் நடித்தவர்.

காதல் அழிவதில்லை என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான சிலம்பரசன், தொடர்ந்து மன்மதன் வல்லவன் கோவில் தம் குத்து சரவணா செக்கச் சிவந்த வானம் வந்தத ராஜாவா தான் வருவேன் விண்ணைத்தாண்டி வருவாயா வெந்து தணிந்தது காடு ஒஸ்தி என பல வெற்றி படங்களில் நடித்தவர்.

- Advertisement -

வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படம், அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை, வெற்றியை பெற்றுத்தந்த படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து சிலம்பரசன் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தில் நடிப்பதாகவும், அந்த படத்தை நடிகர் கமலஹாசனின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாகவும் கடந்த ஆண்டில் துவக்கத்தில் அறிவித்தனர்.

இந்த படத்திற்காக நீண்ட தலை முடி வளர்த்து, சிம்பு தற்காப்புக் கலைகளையும் கற்றார். இந்த படத்தில் சிம்பு சேகுவாரா கெட்டப்பில் நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் சிம்பு 48 படப்பிடிப்பு பல மாதங்களாகியும் துவங்கப்படவே இல்லை. ஆனால் படத்தின் ப்ரீ புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருவதாகவும், இதற்காக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவன அலுவலகத்திலேயே படக்குழுவினர், அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஒரு தகவல் பரவியது.

- Advertisement -

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு சிம்பு 48 படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் போன்ற சில காரணங்களால் இந்த படத்தை தயாரிப்பதில் இருந்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விலகி கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இது சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது. ஆனாலும் நடிகர் சிம்பு, இந்த கதையை விட மனமில்லாமல் தவித்தார். நடிகர் சிம்புவே இதற்கான ப்ரீ புரடக்சன்ஸ் செலவுகளையும் செய்து வந்தார். மறுபுறம் சிம்பு 48 படத்தை தயாரிக்க வேறு தயாரிப்பாளரையும் தேடி வந்தார்.

இந்நிலையில் தற்போது சிம்புவே ஆட்மேன் சிலம்பரசன் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அவரே சிம்பு 48 படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சிம்பு தனது தந்தையின் டி ராஜேந்தரின் சிம்பு சினி தயாரிப்பு நிறுவனத்தில் சில படங்கள் நடித்து இருக்கிறார். இப்போது சிம்புவே, அட்மின் சிலம்பரசன் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதில் தேசிய பெரியசாமி இயக்கும் தனது 48வது படத்தை தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரிப்பது ரசிகர்கள் மத்தியில் பலத்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.

- Advertisement -

சற்று முன்