- Advertisement -
Homeபொழுதுபோக்குசிம்புவுடன் வெற்றிமாறன் இணையும் படம், வடசென்னை திரைப்படத்தின் அந்த கதாபாத்திரத்தை மையப்படுத்திதான் இருக்கப் போகுதா... ஆச்சரியம்...

சிம்புவுடன் வெற்றிமாறன் இணையும் படம், வடசென்னை திரைப்படத்தின் அந்த கதாபாத்திரத்தை மையப்படுத்திதான் இருக்கப் போகுதா… ஆச்சரியம் அளிக்கும் தகவல்…

- Advertisement -

சிம்பு நடிப்பில் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பத்து தல திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தக் லைப் மூலம் சிம்பு மீண்டும் திரைக்கு வந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றிருக்கிறது. வசூலிலும் எதிர்பார்த்த அளவு பணம் குவிக்கவில்லை.

சிம்பு ரசிகர்களுக்குமே இந்த திரைப்படம் ஏமாற்றத்தை கொடுத்தது. இப்படியான சூழலில் அவரின் அடுத்தடுத்த திரைப்படம் குறித்த தகவல் அவ்வபோது வெளியாகி கொண்டே இருக்கிறது. ஏற்கனவே சிம்புவின் 49வது திரைப்படத்தை பார்க்கிங் பட இயக்குனர் எடுப்பதாகத்தான் இருந்தது. இதனை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் தயாரிப்பதாக இருந்தது.

- Advertisement -

ஆனால் நடுவே நடந்த அமலாக்கத்துறை சோதனை காரணமாக அந்த திரைப்படத்தின் பணிகள் தற்போது தள்ளிப் போவதாக சொல்கிறார்கள். இப்படியான சூழலில்தான், சிம்புவின் 49 வது திரைப்படம் கை மாறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே வெற்றிமாறனும் சிலம்பரசனும் இணைந்து வடசென்னை திரைப்படத்தில் பணிபுரிவதாக இருந்தது. முதலில் தனுஷிடம் இந்த திரைப்படம் சென்று அது நடக்காமல் போக, பிறகு சிம்புவும் வெற்றிமாறனும் இணைய இருந்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் மீண்டும் வடசென்னை திரைப்படம் தனுஷின் கைகளுக்கே சென்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இந்த திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

- Advertisement -

வடசென்னை திரைப்படம் ரிலீஸ் ஆனதிலிருந்து அதன் இரண்டாம் பாகம் எப்போது என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். அண்மையில் குபேரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், வடசென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று உறுதியாக கூறியிருந்தார். ஆனால் யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் தற்போது சிம்பு வெற்றிமாறன் இணைந்து பணிபுரிவதாக தகவல் கசிந்திருக்கிறது.

அதுவும் வட சென்னையை அவர்கள் தொட இருப்பதாக சொல்கிறார்கள். அந்த திரைப்படத்தில் ராஜன் என்னும் முக்கியமான கதாபாத்திரத்தில் அமீர் நடித்திருந்தார். ராஜன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து அதன் முந்தைய பாகமாக இது எடுக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறாராம். ஜூலை மாதம் மத்தியில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்