- Advertisement -
Homeபொழுதுபோக்குதேசிங்கு பெரியசாமி படத்தில் சிம்புவுக்கு டபுள் கேரக்டராம்... ஹீரோ, வில்லன் என கமல் முன்பே வித்தையை...

தேசிங்கு பெரியசாமி படத்தில் சிம்புவுக்கு டபுள் கேரக்டராம்… ஹீரோ, வில்லன் என கமல் முன்பே வித்தையை காட்டும் எஸ் டி ஆர்…

- Advertisement -

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. துல்கர் சல்மான், ரித்து வர்மா, ரக்சன், நிரஞ்சனி ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தில், இருக்கும் சிறு சிறு விரிசல்களை பயன்படுத்தி அதன் மூலம் பணத்தை கொள்ளை அடிக்கும் இளைஞர்கள் ஒரு பக்கம், பணக்காரர்களை குறிவைத்து அவர்களிடம் நண்பர்களாக நடித்து பணத்தை எடுக்கும் இளம்பெண்கள் இன்னொரு பக்கம் என சுவாரசியமாக கதையை கூறியிருந்த தேசிங்கு பெரியசாமி, இருவரும் இணைந்தால் எப்படி இருக்கும் என்பதை விறுவிறுப்பு குறையாமல் திரையில் காட்சிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

துல்கர் சல்மானின் 25 வது திரைப்படமாக உருவாகிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தமிழில் சூப்பர் ஹிட் ஆனது. முதல் படத்திலேயே சினிமா விமர்சகர்கள் மத்தியில் தேசிங்கு பெரியசாமி பெரிய அளவில் பேசப்பட, அவரை அழைத்து ரஜினியும் பாராட்டினார்.

இருவரும் பேசிக் கொண்ட ஆடியோ வெளியான நிலையில், அவரிடம் தனக்கு ஏற்ற கதையை கூறுமாறு ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார். இதையடுத்து தேசிங்கு பெரியசாமி ரஜினி கூட்டணி இணைவது கிட்டத்தட்ட உறுதியானது. அவருக்கான கதையை தயார் செய்வதிலும் இயக்குனர் முழுமூச்சாக இறங்கினார்.

- Advertisement -

ஆனால் கடைசி வரை இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமலே போனது. இயக்குனரின் திரைக்கதையில் ரஜினிகாந்துக்கு முழு திருப்தி இல்லாததால், அவர் படத்தில் நடிக்க சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக, தேசிங்கு பெரியசாமியின் படத்தை கமல் தயாரிக்க இருப்பதாகவும், இதில் சிலம்பரசன் கதாநாயகனாக நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

வரலாற்று திரைப்படமாக ஃபேண்டஸி ஜானரில் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. இதில் கமலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஒரு பேச்சு எழுந்தது. இந்த நிலையில் தற்போது சிம்பு, வில்லன் மற்றும் ஹீரோ என இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மன்மதன், சிலம்பாட்டம் திரைப்படங்களுக்கு பிறகு சிம்பு இரு வேடங்களில் நடிப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்