- Advertisement -
Homeபொழுதுபோக்குஉறவை முறித்துக்கொண்ட உலக நாயகன் கமல், அதிரடி முடிவெடுத்த நடிகர் சிம்பு, எங்க தலைக்கு...

உறவை முறித்துக்கொண்ட உலக நாயகன் கமல், அதிரடி முடிவெடுத்த நடிகர் சிம்பு, எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பார்த்தியா? – சட்டை காலரை தூக்கிவிடும் ரசிகர்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் சிலம்பரசனும், நடிகர் கமல்ஹாசனை போலவே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு பெரிய நட்சத்திர நடிகராக வெற்றி பெற்றவர். தந்தை டி ராஜேந்தரை போலவே சினிமா தொழில்நுட்பம் அதிகம் அறிந்த சிலம்பரசன், நடிப்பிலும் கை தேர்ந்தவர். நல்ல கலைஞராக தன்னை பல வெற்றிப் படங்களில் நிரூபித்தவர்.

கடந்த 2 ஆண்டுகளாக நடிகர் சிலம்பரசன் நடிக்கும், வரலாற்று படம் ஒன்றை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. நடிகர் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனம்தான் இது. இந்த படத்தில் சிலம்பரசன் நடிக்கவும், பெரிய பட்ஜெட்டில் முதலீடு செய்து படம் எடுக்கவும் கமலும் தயாராக தான் இருந்தார்.

- Advertisement -

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், இந்த படத்தில் முதலில் ரஜினிகாந்த் நடிப்பதாக தான் இருந்தது. ஆனால் ரஜினி ஒரு கட்டத்தில் நடிக்க முடியாமல் போனதால், சிம்பு நடிக்க முடிவானது. துவக்கத்தில் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்ட இந்த படம், இன்றைய சூழலில் ரூ. 250 கோடிக்கு மேல் செலவு அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

நடிகர் சிம்புவுக்கு பெரிய வெற்றிப் படங்கள் சமீபகாலமாக இல்லாத சூழலில், இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் சிம்புவை நடிக்க வைக்க கமல்ஹாசன் விரும்பவில்லை. அதனால் அவருக்கு கொடுத்த அட்வான்ஸ் பணத்தை, தக்லைப் படத்துக்காக மாற்றி, அந்த படத்தில் சிம்புவை நடிக்க வைத்துவிட்டார். மேலும், சிம்புவை வைத்து படம் தயாரிக்கும் முடிவில் இருந்தும் கமல் பின்வாங்கி, இந்த விஷயத்தில் சிம்புவுடன் உறவை முறித்துக் கொண்டார்.

- Advertisement -

இதில் மற்றொரு முக்கிய காரணம், சேட்டிலைட் டிஜிட்டல் உரிமங்களும் தங்களது விலையை வெகுவாக குறைத்துவிட்ட நிலையில், சிம்பு படத்தை தயாரிப்பதில் நிறைய ரிஸ்க் இருப்பதால், கமல் மறுத்துவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது. ஆனால் இப்போது கமல் கைவிட்ட தனது படத்தை சிம்புவே தயாரிக்க முன்வந்துவிட்டார் என்ற அதிரடி தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது, ஆதம்ஸ் புரடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் பெயரில் தனது சொந்த தயாரிப்பில், தேசிங்கு பெரியசாமி இந்த படத்தில் சிம்பு நடிக்கிறார். ஏற்கனவே தனது தந்தையின் சிம்பு சினி கிரியேன்ஸ் தயாரிப்பு நிறுவனம் இருந்தாலும், தனக்கென்ற ஒரு தனி தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து, இந்த படத்தை சிம்பு தயாரிக்கிறார். இப்படி ஒரு அதிரடி முடிவை பார்த்து, சிம்பு ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்