- Advertisement -
Homeபொழுதுபோக்குநீ இல்லேன்னா வேற ஒருத்தர் என்று போயிடுவாங்க… திருமணம் குறித்த கேள்விக்கு நடிகர் சிம்பு கூறிய...

நீ இல்லேன்னா வேற ஒருத்தர் என்று போயிடுவாங்க… திருமணம் குறித்த கேள்விக்கு நடிகர் சிம்பு கூறிய அதிரடி பதில்!

- Advertisement -

சினிமா துறை சார்ந்த நடிகர் நடிகைகளை பொருத்த வரை அவர்களது திருமணம் என்பது தாமதமாக நடக்கும். இதில் சிலர் தங்களுடன் சில படங்களில் ஜோடியாக நடித்த நடிகர் அல்லது நடிகையை காதலித்து திருமணம் செய்துக்கொள்வார்கள். இன்னும் சிலர் இயக்குனர்களை காதலித்து மணந்து கொள்வார்கள்.

சினிமா நட்சத்திரங்கள் திருமண வாழ்வு என்பது எப்போதுமே சிக்கலாக இருக்கிறது. விரைவில் விவாகரத்து, அடுத்த திருமணம் என்ற நிலை அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் ஒரு தரப்பினர் திருமணம் செய்துக்கொள்ளாமலேயே முரட்டு சிங்கிளாகவே வாழ்ந்து விடுவார்கள்.

- Advertisement -

நடிகைகளின் திருமண முறிவுக்கு முக்கிய காரணமாக இருப்பது, திருமணத்துக்கு பிறகு நடிக்க கூடாது என்று கணவர் மற்றும் கணவரது குடும்பம் போடும் முக்கிய நிபந்தனை தான். லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பாதித்த ஒரு நடிகை, சினிமா தந்த புகழை இழக்க விரும்ப மாட்டார். அதுவே பலரது திருமண முறிவுக்கு முக்கிய காரணமாகிறது.

நடிகர்களில் விஷால் சிம்பு பிரபாஸ் எஸ்ஜே சூர்யா நட்டி நடராஜன் போன்றவர்கள் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. இதில் எஸ்ஜே சூர்யா நட்டி நடராஜன் போன்றவர்கள் 50 வயது கடந்தவர்கள். மற்றவர்கள் 40 வயது கடந்தவர்களாக உள்ளனர். அதே போல் அனுஷ்கா திரிஷா ஸ்ருதிஹாசன் போன்றவர்களும் இன்னும் முரட்டு சிங்கிளாக தான் இருந்து வருகின்றனர்.

- Advertisement -

இதில் நடிகர் சிலம்பரசன் 40 வயதுகளை கடந்த நிலையில், அவரது திருமணம் எப்போது என்பது ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. அவரது தம்பி குறளரசன் தங்கை இலக்கியா திருமணம் செய்து பிள்ளைகள் பெற்று குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் சிம்பு இன்னும் முரட்டு சிங்கிளாக வலம் வருவது அவரது பெற்றோர் டி ராஜேந்தர் உஷா தம்பதிக்கு பெரிய வருத்தமாக மனக்கவலையாக இருந்து வருகிறது.

சமீபத்தில் தக்லைஃப் பட பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிம்புவிடம் திருமணம் குறித்து கேட்ட போது அவர் கூறியதாவது, திருமணம் என்பது தப்பு இல்லை. சரியான நபரை தேர்ந்தெடுப்பதுதான் முக்கியம். இன்றைய கால கட்டத்தில் விட்டுக் கொடுத்துப் போகும் மனப்பான்மை மிகவும் குறைந்து விட்டது. நீ இல்லேன்னா வேறொருவர் என்கிற மனநிலையில் ஆணும் பெண்ணும் இருப்பதாக நினைக்கிறேன். அப்படி இருக்கக் கூடாது. உங்களுக்கு சரியான நேரம் வரும்போது, உங்களுக்கான சரியான நபர் கிடைக்கும் போது திருமணம் மகிழ்ச்சியாக நடக்கும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்