- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக மாநாட்டிற்கு என்னை அழைக்கவில்லை என்றாலும் செல்வேன்... கூட்டத்தில் ஒரு வாக்காளராக ஓரமாக நின்று பார்ப்பேன்......

தவெக மாநாட்டிற்கு என்னை அழைக்கவில்லை என்றாலும் செல்வேன்… கூட்டத்தில் ஒரு வாக்காளராக ஓரமாக நின்று பார்ப்பேன்… உணர்ச்சி பொங்க பேசிய ஆக்சன் ஹீரோ…

- Advertisement -

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் அரசியல் கட்சியை தொடங்கி மெல்ல மெல்ல அதில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கட்சி கொடியை அவர் அறிமுகப்படுத்தினார். அதில் இரு பக்கமும் யானையும், வாகை மலரும் இருந்தது.

 

- Advertisement -

இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. வரும் 27ஆம் தேதி இந்த மாநாடு நடைபெறும் நிலையில் அதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

 

- Advertisement -

மாநாட்டில் விஜய் என்ன பேசப் போகிறார் என்பதுதான் இப்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இதுவரை தனது அரசியல் நிலைப்பாட்டை அவர் தெளிவாக எந்த இடத்திலும் கூறியதில்லை. இதற்கு முன்பு ஒரு முறை மட்டும் நீட் தேர்வுக்கு எதிராக அவர் பேசியிருந்தார்.

 

அப்போது கூட மத்திய அரசை அவர் ஒன்றிய அரசு என்றே அழைத்து இருந்தார். தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சியினர் மட்டுமே மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறும் சூழலில், அதனை விஜயும் கடைப்பிடித்தது பலரது பார்வையிலும் பட்டது.

 

இப்படி ஒன்று இரண்டு விஷயங்களை மட்டுமே வெளிப்படுத்திய விஜய், மாநாட்டில் தனது கொள்கைகளை அறிவிப்பாரா என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார். தனது மாநாட்டிற்கு கர்ப்பிணிகள் பள்ளி சிறுவர் சிறுமியர்கள் முதியோர்கள் வர வேண்டாம் என்றும் விஜய் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு செல்ல இருப்பதாக நடிகர் விஷால் கூறியிருக்கிறார்.

 

ஒரு வாக்காளராக அவர் என்ன பேசப் போகிறார் என்பதை தான் அறிய காத்திருப்பதாகவும், கூட்டத்தில் ஒரு ஓரமாக நின்று ஒரு வாக்காளராக மாநாட்டில் பங்கேற்பேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். நடிகர் விஜய் அழைக்காவிட்டாலும் தான் செல்வேன் என்று நடிகர் விஷால் கூறி பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்