- Advertisement -
Homeபொழுதுபோக்குஆரம்பமே இப்படி ஒரு விவகாரமா? சிம்பு - வெற்றிமாறன் படப்பிடிப்பில் நடந்த தரமான சம்பவம் -...

ஆரம்பமே இப்படி ஒரு விவகாரமா? சிம்பு – வெற்றிமாறன் படப்பிடிப்பில் நடந்த தரமான சம்பவம் – பல்பு கொடுத்த எஸ்டிஆர், பதிலுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?

- Advertisement -

விடுதலை 2 படத்துக்கு பிறகு தயாரிப்பாளர் தாணு தயாரிக்கும் ஒரு படத்தை இயக்குனர் வெற்றிமாறன் டைரக்ட் செய்கிறார். தக்லைஃப் படத்துக்கு பிறகு இந்த படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு முறையாக துவங்கவில்லை. ஆனால் பிரமோ ஷூட் மட்டுமே நடந்துள்ளது. இதற்கிடையே நடந்த சில சம்பவங்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சிம்பு ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிக்க முடிவானதும், இயக்குனர் வெற்றிமாறன் இயக்குனர் மணிரத்னத்தை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது நடிகர் சிம்பு குறித்து மணிரத்னத்திடம் வெற்றிமாறன் சில ஒபீனியன் கேட்டிருக்கிறார். ஒழுங்காக நடிப்பாரா, ஷூட்டிங்குக்கு சரியாக வருவாரா, ஒத்துழைப்பு தருவாரா என்று கேட்க, மணிரத்னமும் 100 சதவீதம் சிறந்த கலைஞர் என நற்சான்றிதழ் தந்திருக்கிறார்.

- Advertisement -

அதன்பிறகு சிம்புவும் வெற்றிமாறனும் தங்களது படம் குறித்து பேச முதன்முறையாக சந்தித்துள்ளனர். அப்போது சிம்புவிடம் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், படப்பிடிப்புக்கு சரியாக வராத நடிகரும், கால வரைமுறையின்றி ஷூட்டிங்கை இழுத்துக்கொண்டே போகும் இயக்குனரும் சேர்த்து உருவாக்கும் படம் என்று நம்மை கிண்டல் செய்வார்கள் என்று கூறியிருக்கிறார்.

இதைக்கேட்டு சற்று நெருடலான நடிகர் சிம்பு, அடுத்தசில நாட்களில் நடந்த பிரமோ ஷூட்டிங்குக்கு முன்னதாக வந்திருக்கிறார். இயக்குனர் வெற்றிமாறன் சொன்ன பிரமோ ஷூட்டிங்குக்கு காலை 8 மணிக்கு பதிலாக காலை 6 மணிக்கே சிம்பு வந்து மேக்கப் போட்டு தயாராகி இருக்கிறார். 7.30 மணியளவில் வெற்றிமாறனுக்கு போன் செய்து, நான் வந்துவிட்டேன் என்றும் சிம்பு கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆனால், நான் உங்களை 8 மணிக்கு தானே வரச்சொன்னேன். எதற்காக இவ்வளவு முன்னதாக வந்தீர்கள் என்று கேட்ட இயக்குனர் வெற்றிமாறன், அன்று மதியம் 2 மணிக்கு தான் பிரமோ காட்சிக்கான படப்பிடிப்பையே துவங்கியிருக்கிறார். அதுவும் சிம்பு கெட்டப் சேஞ்ச் செய்ய வேண்டும் என்று மதியம் வரை படப்பிடிப்பு தாமதம் செய்யப்பட்டுள்ளது.

தன்னை பற்றி இயக்குனர் மணிரத்னத்திடம் விசாரிக்க சென்ற வெற்றிமாறன் மீது சிம்புவுக்கு சற்று வருத்தமும் கோபமும் இருந்திருக்கலாம். மேலும் அவரிடமே ஷூட்டிங்குக்கு வராத ஹீரோ என்று வெற்றிமாறன் நேரடியாக கூறியதும் சற்று சங்கடத்தை எரிச்சலை தந்திருக்கலாம். அதற்காக 8 மணிக்கு ஷூட்டிங்குக்கு 6 மணிக்கே வந்து வெற்றிமாறனுக்கு பல்பு தர நினைத்த சிம்புவுக்கு, மதியம் 2 மணி வரை ஷூட்டிங்கை தாமதப்படுத்தி பெரிய டியூப் லைட்டையே வெற்றிமாறன் திருப்பி கொடுத்திருப்பதுதான் இதில் ஹைலைட்டாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்