- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி நடிக்கும் விஜய் 69 படத்தில் நடிக்க கமிட் ஆன பிரபல நடிகை யார் தெரியுமா?...

தளபதி நடிக்கும் விஜய் 69 படத்தில் நடிக்க கமிட் ஆன பிரபல நடிகை யார் தெரியுமா? – கடைசி படம் என்பதால் அவருக்கு மறக்காம வாய்ப்பு கொடுத்துட்டாரோ…?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 5ம் தேதி வெளியான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த நான்கு நாட்களில் உலகம் முழுவதும், மொத்தம் 275 கோடி ரூபாய்களை வசூலித்து விஜய் மீண்டும் வசூல் நாயகன் என்பதை இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார். தி கோட் படம் விஜய் நடிப்பில் 200 கோடிகளை கடந்த 8வது படம் என்ற சிறப்பையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் தவெக அரசியல் கட்சி தொடங்கி ஏழு மாதங்கள் கடந்த நிலையில் அவரது கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதுவும் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. ஒரு புறம் தி கோட் படத்துக்கு கிடைத்த வெற்றி, மறுபுறம் கட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என மிக உற்சாகமாக தனது அரசியல் பயணத்தை தொடர்கிறார்.

- Advertisement -

வரும் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி விசாலை கிராமத்தில் சுமார் 50,000 பேர் பங்கேற்கும் மாபெரும் அரசியல் முதல் மாநாட்டை நடத்த விஜய் ஆயத்தமாகி வருகிறார். இதற்கிடையே அவர் கடைசியாக நடிக்க போகும் அவரது 69 படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கும் மக்கள், சினிமாவை விட்டு விஜய் விலகுவதை வருத்தமாக தான் பார்க்கின்றனர். ஏனென்றால் அவர் சிறந்த, ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக இருப்பதால் சினிமாவை விட்டு அவர் விலகுவது என்பது ரசிகர்களுக்கு பலத்தை ஏமாற்றது தான் கொடுத்திருக்கிறது. என்றாலும் அரசியல்வாதியாக அவர் ஜெயிக்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் விருப்பமாக இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் விஜய் 69 படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்குவது ஏற்கனவே உறுதியாகி விட்டது. அந்த படத்தில் பிரேமலு கதாநாயகி மமிதா பைஜூ விஜய்க்கு மகளாக நடிக்கிறார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் லேட்டஸ்ட் தகவலாக விஜய் 69வது படத்தில் நடிகை சிம்ரன் நடிக்கிறார் என்ற தகவலும் உறுதியாகி இருக்கிறது. இதுகுறித்து சிம்ரனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவரும் ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது.

நடிகர் விஜய் சினிமா பயணத்தில் சிம்ரன் அவருடன் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. குறிப்பாக துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, ஒன்ஸ்மோர் போன்ற படங்கள் சிம்ரன் விஜய் ஜோடியாக நடித்து பெரிய வெற்றியைப் பெற்ற படங்களாக அமைந்தன. அதேபோல் உதயா படமும் விஜய் சிம்ரன் இணைந்து நடித்திருந்தனர். யூத் படத்தில் ஆல்தோட்ட பூபதி நானடா என்ற பாடலுக்கு விஜயுடன் நடனமாடி ரசிகர்களை வெகுவாக சிம்ரன் கவர்ந்தார். இப்போதும் அந்த பாடல் டிரண்டிங்கில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்