- Advertisement -
சமூக வலைதளங்களில் அவ்வப்போது முக்கிய பிரபலங்கள் குறிப்பாக சினிமா துறை சார்ந்தவர்கள் குறித்து தவறான வதந்திகள் பரவி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்துகிறது. சில விஷமிகள் இப்படி பொய்களை பரப்புகின்றனர். இந்த நிலையில் பழம்பெரும் பாடகி எல்ஆர் ஈஸ்வரி உடல் நலம் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் இருப்பதாக நேற்றும் இன்றும் இணையத்தில் ஒரு தகவல் வைரலானது. ஆனால் உண்மையில் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் எப்போதும் போல வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு காலில் அடிபட்டு இருப்பதால் கச்சேரிகள் செய்ய வெளியில் செல்வதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 1958 முதல் 2020 வரை அம்மன் பாடல்களை பாடி ரசிகர்களின் மனங்களை வென்றவர் எல்ஆர் ஈஸ்வரி என்பது குறிப்பிடத்தக்கது.





