- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் கே பாக்யராஜிடம் அப்படி ஒரு கேள்வியை கேட்ட நடிகர் திலகம் சிவாஜி...

ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் கே பாக்யராஜிடம் அப்படி ஒரு கேள்வியை கேட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – அவரே சொன்ன ஓபன் சீக்ரட்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு விழாவில் நடந்த சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியில் நடுவராக இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் பங்கேற்றார். அப்போது பட்டிமன்ற நடுவர் என்ற முறையில் இரு அணிகளை சேர்ந்த பேச்சாளர்களும் பேசும் போது கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டால் நடுவரான கே பாக்யராஜ் தன் முன்பு உள்ள மணியை எடுத்து ஆட்டி அவர்களை பேச்சை உடனே முடிக்குமாறு எச்சரிக்க வேண்டும்.

இதுகுறித்து அந்த மேடையில் நடிகர் கே பாக்யராஜ் பேசியதாவது, பட்டிமன்ற நடுவராக அமர்ந்து இங்கே மணியை எடுத்து ஆட்டும் போது எனக்கு படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அதாவது தாவணி கனவுகள் படத்தை நான் டைரக்ட் செய்தேன். அதில் நடிகர் சிவாஜி கணேசன் மிலிட்ரி மேஜராக நடித்தார்.

- Advertisement -

அப்போது ஒரு காட்சியில் சிவாஜி கணேசன் தேசியக் கொடி ஏற்றி வணக்கம் சொல்வார். அந்த நேரத்தில் அங்குள்ள ஒரு ரோட்டோர கோவிலில் பூசாரி ஒருவர் மணியடித்து பூஜை செய்துக் கொண்டிருப்பார். அவரிடம் கோபமாக சிவாஜி கணேசன் கேள்வி கேட்பது போலவும் அதற்கு பூசாரி பதில் சொல்வது போலவும் அன்று காட்சியை திட்டமிட்டு எடுத்துக் கொண்டிருந்தேன்.

அப்போது சிவாஜி என்னிடம், பாகி அந்த பூசாரி கரெக்டா நடிப்பானா? ஒரு ரிகர்சல் பார்த்துடலாமா என்று கேட்டார். நான் அதற்கு இது ஒரு சாதாரணமான காட்சி. பூசாரி மணியடித்து பூஜை செய்வார். அப்போது நீங்கள் பூசாரியிடம் சில கேள்விகளை கேட்கும் போது அவர் சொல்லும் பதில்களை காமெடியாக எழுதியிருக்கிறேன் என்று சொன்னேன்.

- Advertisement -

அப்போ ரிகர்சல் வேண்டாமா? பூசாரி கரெக்டா பண்ணிடுவானா என்றார். நான் அவரிடம் நோ பிராப்ளம் என்று சாதாரணமாக சொல்லிவிட்டு அந்த காட்சியை எடுத்தேன். அப்போது அந்த பூசாரியாக நடித்த நடிகர் ஒரு கையில் மணியடித்தபடி ஒரு கையில் தீபம் எரியும் ஆராத்தி தட்டை மேலும் கீழும் சுற்றத் தெரியாமல் தடுமாறினார். அப்போதுதான் சிவாஜி திரும்ப திரும்ப என்னிடம் கேட்டது புரிந்தது.

ஏனெனில் பூஜை செய்து பழக்கம் உள்ளவர்களுக்கே ஒரு கையால் மணியடித்தபடி மற்றொரு கையில் பூஜை தட்டை மேலும் கீழுமாக சுலபமாக சுற்ற முடியும். இல்லை என்றால் 2 கைகளையுமே ஆட்டி சொதப்பி விடுவார்கள். இதை தான் சிவாஜி என்னிடம் சூசகமாக கேட்டிருக்கிறார் என்று பிறகு புரிந்தது. சிவாஜியிடம் ஒரு ரிகர்சல் பார்த்துவிடலாம் என்று நான் சொல்ல அவர் சிரித்து விட்டு ஓகே சொன்னார் என்று கே பாக்யராஜ் இந்த ருசிகர தகவலை பகிர்ந்துக் கொண்டார்.

- Advertisement -

சற்று முன்