தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நட்டி என்கிற நடராஜ். இவர் சதுரங்க வேட்டை, முத்துக்கு முத்தாக, மிளகா, நம்ம வீட்டுப் பிள்ளை, கர்ணன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் போலீஸ் எஸ்பி கேரக்டரில் மிகவும் ஒரு கொடூரமான வில்லன் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல நல்ல படங்களில் நடித்து வருகிறார் நட்டி. அதேபோல் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கணவராக, வில்லங்கம் செய்யும் ஒரு கேரக்டராக நடித்திருப்பார். இந்த படத்திலும் நட்டியின் நடிப்பு சிறப்பாக இருந்தது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வரும் நட்டி, உண்மையில் அவர் சினிமா நடிகர் அல்ல. திரைப்பட ஒளிப்பதிவாளர் என்பது பலருக்கும் தெரியாது. அவர் பாலிவுட்டில் முன்னணி இந்தி நடிகர்கள் நடித்த படங்களின் ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணி புரிந்திருக்கிறார். ஆனால் தமிழ் சினிமாவில் நடிகராக பல படங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இப்போது மீண்டும் நட்டி பாலிவுட் செல்கிறார். ஆனால் இந்த முறை அவர் ஒளிப்பதிவாளராக செல்லவில்லை. பாலிவுட்டில் எடுக்கப்படும் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நட்டி நடிக்கிறார். அதாவது தென்னாபிரிக்காவில் மகாத்மா காந்தி இருந்தபோது அங்கு குமரேசன் பிள்ளை என்ற தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் அவருக்கு இருந்தார்.
அவர் மூலமாகத்தான் இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்த விவரங்களை எல்லாம் தெரிந்து கொண்ட காந்தியடிகள், பிறகு இந்தியாவுக்கு வந்து சுதந்திர சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டார் என்பது வரலாறு. அப்படிப்பட்ட ஒரு கேரக்டரில் மகாத்மா காந்தியின் நண்பராக, தமிழராக குமரேசன் பிள்ளை என்ற கேரக்டரில் நடிக்கிறார் நட்டி என்ற தகவல், வெளியாகி உள்ளது.
இதுவரை நடித்த படங்களில் சதுரங்க வேட்டை படத்தில் மோசடி நபராகவும், முத்துக்கு முத்தாக படத்தில் குடும்பத்தின் மூத்த மகனாக பள்ளி ஆசிரியராகவும், அதேபோல் மிளகாய் படத்தில் விடலைத்தனமான காமெடி கேரக்டரிலும் தன் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களையும் ரசிக்க வைத்த நடிகர் நட்டி, முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலிவுட் படத்திலும் குமரேசன் பிள்ளை கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.





