நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்புலகில் பல்கலைக்கழகமாக போற்றப்படுகிறார். அவரது மூத்த மகன் ராம்குமார் சில படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக திரைப்பட தயாரிப்பாளராக அவர் இருந்து வருகிறார். சிவாஜியின் இளைய மகன் பிரபு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப் படங்களை தந்தவர். இப்போதும் குணச்சித்திர வேடங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கும்கி என்ற படம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படம் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார். ஆனால் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
ராம்குமாரின் மூத்த மகன் துஷ்யந்த் சில படங்களில் நடித்தார். ஆனால் பெரிய வரவேற்பு அவருக்கு கிடைக்காத நிலையில் தயாரிப்பாளராக மாறி சில படங்களை தயாரித்தார். அதில் ஜெகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்த வகையில் கடன் வாங்கிய விவகாரத்தில் தான் அன்னை இல்லம் வீடு ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இப்போது தலைவன் தலைவி என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நாயகன் நாயகியாக விஜய் சேதுபதி நித்யாமேனன் நடித்துள்ளனர். அடுத்து விஷ்ணு விஷால் நடிப்பில் இரண்டு வானம் என்ற படத்தையும் அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் நடிப்பில் ஒரு படத்தையும் தயாரித்துள்ளது.
நடிகர் திலகம் சிவாஜியின் மகன் ராம்குமாரின் இளையமகன் தர்ஷன். அதாவது துஷ்யந்தின் தம்பிதான் தர்ஷன். அவர்தான் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். பாலா என்கிற புதுமுக இயக்குனர்தான் இந்த படத்தை இயக்குகிறார். கங்கை அமரன் நடிகை ரோஜா ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கின்றனர்.
விவசாயிகளுக்கு பாதுகாப்பு தரும் ஒரு கான்ஸ்டபிளை மையப்படுத்திய இந்த கதையில் அந்த கான்ஸ்டபிள் கேரக்டரில் தர்ஷன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நாயகியாக படவா படத்தில் நாயகியாக நடித்த ஷ்ரிதா ராவ்தான் இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தயாரான நிலையில் விரைவில் மிக பிரமாண்டமாக இந்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.





