- Advertisement -
Homeபொழுதுபோக்குராணுவ வீரரைத் தொடர்ந்து முருகதாஸ் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் சிவகார்த்திகேயன்... அட வர வர...

ராணுவ வீரரைத் தொடர்ந்து முருகதாஸ் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் சிவகார்த்திகேயன்… அட வர வர எஸ்கேவோட ரேஞ்ச் கூடிகிட்டே இருக்கியேப்பா…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக உருவாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். டாக்டர் திரைப்படத்தின் மூலம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நடிகர்களின் பட்டியலில் அவர் இணைந்தார். இதன் பிறகு வெளியான டான் திரைப்படமும் அவருக்கு மிகப் பெரிய வரவேற்பை கொடுத்தது.

பிறகு பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி அவருக்கு மிகப்பெரிய அடியை கொடுக்க, மாவீரன் திரைப்படத்தின் வெற்றியின் மூலம் அதிலிருந்து மீண்டார். தமிழ் சினிமாவில் பழக்கப்பட்ட சூப்பர் ஹீரோ கதை தான் என்றாலும் அது எடுக்கப்பட்ட விதம் அற்புதமாக இருந்ததால் மாவீரன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றனர்.

- Advertisement -

இப்படியான சூழலில் அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாட்கள் கிடப்பில் போடப்பட்டிருந்த அயலான் திரைப்படம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

அதேசமயம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அயலான் திரைப்படம் உருவெடுத்தது. இந்த நிலையில் தற்போது, அமரன் திரைப்படத்தில் அவர் நடித்து முடித்திருக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இதனை தயாரித்திருக்கிறது. படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ராணுவ வீரர் கதாபாத்திரத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. ராணுவ வீரன் முகுந்தன் கதையை மையமாக வைத்து தான் இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் சூட்டிங் முடிந்த நிலையில் தற்போது ஏ ஆர் முருகதாஸ் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இதன் சூட்டிங் புதுச்சேரியில் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகைப்படமும் அண்மையில் வெளியானது. இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடித்திருக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கல்லூரி மாணவர் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகாத சூழலில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்