சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஏற்கனவே தனது மகள் ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் லால் சலாம் படத்தில் ரஜினி நடித்துள்ளார். இதில் மொய்தீன் கான் என்னும் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் அவர் வருகிறார். கிரிக்கெட்டையும் மத அரசியலையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படத்தில், விஷ்ணு விஷால் விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதில் இறுதியாக தோன்றும் ரஜினிகாந்த், விளையாட்டிலுமா மதத்தை கலப்பீங்க என்று கூறிய டயலாக் பலரையும் கவனிக்கச் செய்தது. இதைத்தொடர்ந்து ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலுடன் ரஜினிகாந்த் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதன் சூட்டின் முதலில் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. பிறகு அங்கிருந்து திருநெல்வேலி, பின்னர் மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. தற்போது சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. என்கவுண்டருக்கு எதிராக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஓய்வு பெற்ற அதிகாரியாக ரஜினி வருகிறாராம்.
இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜூவுடன் இணைகிறார் ரஜினிகாந்த். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் படத்திற்கு இசையமைக்க உள்ளார். சமீபத்தில் ரஜினி படம் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ், இந்த படம் நிச்சயம் எல்சியூ வில் வராது என உறுதிப்பட கூறினார். மேலும் தற்போது படத்திற்கான எழுத்துப் பணிகளை அவர் தொடங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் எதிர்பாராத வகையில் பெரிய பெரிய நட்சத்திரங்கள் இடம் பெறுவார்கள் என்றும் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இதன் சூட்டிங் தொடங்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில் படத்தின் அறிவிப்பு வெளியானது உடன், அது தொடர்பான ஏதாவது ஒரு தகவல் வந்து கொண்டே தான் இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் இணைவதாக கூறப்பட்டது.
சிவகார்த்திகேயனுக்கும் இதில் முக்கிய கதாபாத்திரம் வைத்திருப்பதாகவும், இதில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. நிலையில் அவருக்கு ரஜினியின் மகனுக்கான கதாபாத்திரத்தை நோக்கி வைத்திருக்கிறாராம். ரஜினியின் நண்பனாக மம்முட்டி நடிக்க உள்ளாராம். அதேபோல் வில்லனாக ராகவா லாரன்ஸ் வருகிறாராம். இந்த தகவலால் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ள நிலையில், விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





