- Advertisement -
Homeபொழுதுபோக்குசூரி ஹீரோவாக நடிக்க தைரியம் கொடுத்ததே நான்தான், வெற்றிமாறன் படத்தில் நடிக்க அவர் பயந்தார்...

சூரி ஹீரோவாக நடிக்க தைரியம் கொடுத்ததே நான்தான், வெற்றிமாறன் படத்தில் நடிக்க அவர் பயந்தார் – மேடையில் உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகர்

- Advertisement -

நடிகர் சூரி, வின்னர், தீபாவளி போன்ற துவக்கத்தில் நடித்த சில படங்களில் துணை நடிகர்களில் ஒருவராக நான்கைந்து பேரில் ஒருவராக திரையில் தெரிவார். காதல் படத்தில் சேவல் பண்ணை மேன்சன் ரூமில், ஒருவராக தங்கியிருப்பார். அதில் சூரிக்கு சில வசனங்களும் இருக்கும்.

தொடர்ந்து, வெண்ணிலா கபடிக்குழு படம், அவருக்கு நல்ல அறிமுகத்தை தேடிக் கொடுத்தது. அதில் 50 பரோட்டோ சாப்பிடும் சவாலில் அவர் ஜெயிப்பதும், கோட்டை அழித்து விட்டு மீண்டும் சாப்பிடுகிறேன் என்று சொல்வதும் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. அதன்பிறகு ஒரு காலகட்டம் வரை அவரை பரோட்டா சூரி என்றே டைட்டிலில் காட்டினர்.

- Advertisement -

ஆனால் திறமையும், உழைப்பும் மிகுந்த சூரி அடுத்தடுத்து தனக்கு கிடைத்த பட வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி, தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, முன்னிலை காமெடி நடிகராக மாறினார். அதிலும் சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா, விஷால், விஷ்ணு விஷால் போன்றவர்களுடன் அவர் நடித்தது, அவரை பெரிய அளவில் முன்னேற்றியது.

இயக்குனர் வெற்றிமாறன், அவரை விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக்கினார். கான்ஸ்டபிள் குமரேசனாக சூரி அந்த படத்தில் வாழ்ந்திருந்தார். விடுதலை 2 படத்துக்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இதற்கிடையே கருடன், கொட்டுக்காளி என 2 படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து விட்டார் சூரி.

- Advertisement -

கருடன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, சீமராஜா ஷூட்டிங்கில் நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்த போது, படப்பிடிப்பின் இடைவேளையில், சூரி அண்ணனிடம், கதையின் நாயகனாக சில கதைகளை தேர்வு செய்து நான் நடிக்கச் சொன்னேன். ஆனால் அவர் தயங்கினார்.

சிறிது காலம் கழித்து, வெற்றிமாறன் இயக்கும் படத்தில் என்னை ஹீரோவாக நடிக்கச் சொல்கிறார். ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது. அவருடன் முதல் படம் அப்படி நடித்துவிட்டால், மறுபடி யார் என்னை வைத்து அப்படி படம் எடுப்பார்கள் என்று சூரி என்னிடம் சொன்னார். கண்ணை மூடிக்கொண்டு அவர் சொல்கிறபடி நடித்துவிடுங்கள், என்று நான் சொன்னேன். காமெடி நடிகர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது. அதற்கு உதாரணம்தான் சூரி, என்று பேசியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

- Advertisement -

சற்று முன்