சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வருகிறார். மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் “மாவீரன்” திரைப்படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், அதனை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் தனது 21 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகி வரும் “SK 21” திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வருகிறது.
சிவகார்த்திகேயனின் “மாவீரன்” திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த “அயலான்” திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதால் இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஒரு வழியாக வருகிற தீபாவளி அன்று இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. “அயலான்”ம் திரைப்படம் ஏலியனை மையமாக வைத்து உருவாகி வரும் ஒரு சைன்ஸ் ஃபிக்சன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது வலைப்பேச்சு நிகழ்ச்சியில் மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன், சிவகார்த்திகேயனை குறித்து ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான “டான்” திரைப்படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி, அதனை தொடர்ந்து ரஜினியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது.

அதன் பின் சிபி சக்ரவர்த்தி ஒரு தெலுங்கு ஹீரோவை அணுகினாராம். ஆனால் அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை என்பதால் மிகவும் சோகத்தில் இருந்தாராம். அதனை தொடர்ந்து தான் ஒரு சொந்த படத்தை தயாரிக்கவுள்ளதாக முடிவெடுத்தாராம். ஆனால் சிவகார்த்திகேயனோ, “அவசரப்பட்டுவிடாதீர்கள், இப்போது நான் பிசியாக இருக்கிறேன். ஒரு ஒன்றரை வருடங்கள் காத்திருங்கள், அதன் பின் நானே உங்களுக்கு கால்ஷீட் தருகிறேன்” என நம்பிக்கையாக அவரிடம் கூறியுள்ளாராம்.





