- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதற்கு அனுமதி கேட்ட சிவகார்த்திகேயன்; கண்டிப்பாக இல்லை என மறுத்த டைரக்டர் - உச்சக்கட்ட...

அதற்கு அனுமதி கேட்ட சிவகார்த்திகேயன்; கண்டிப்பாக இல்லை என மறுத்த டைரக்டர் – உச்சக்கட்ட அதிருப்தியில் கமல்ஹாசன்

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன், இப்போது இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அயலான் படம் மாபெரும் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சிவகார்த்திகேயன், நடித்து வருகிறார்.

இந்த படத்தில், மிக வித்தியாசமான முறையில் தனது நடிப்பை சிவகார்த்திகேயன் வெளிப்படுத்தி வருகிறார். அதாவது இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் அவருக்கென உருவான சில மேனரிசங்களை மொத்தமாக தவிர்த்து, இந்த படத்தில் புதுவிதமான உடல் மொழியில் அவர் நடிக்க வைக்கப்படுகிறார்.

- Advertisement -

இதற்காக டைரக்டர் ஏஆர் முருகதாஸ், ஸ்பெஷலாக ஒரு நடிப்பு பயிற்சியாளரை நியமித்து, அவர் மூலம் ஒவ்வொரு காட்சியிலும் சிவகார்த்திகேயனின் பழைய மேனரிசங்கள் எதுவும் வராமல், நுணுக்கமாக கவனித்து புதுவிதமான உடல் மொழியில் அவரை நடிக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் சொந்தப்பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே பல மாதங்களாக சிவகார்த்திகேயன் அமரன் படத்தில் நடித்து வந்த நிலையில், இன்னும் 20 நாட்கள் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டிய காட்சிகள் மீதம் உள்ளது.

- Advertisement -

அதனால், ஏஆர் முருகதாஸ் படத்தில் நடித்து வரும் இந்த சூழலில், இடையில் 20 நாட்கள் மட்டும் இடைவெளி கொடுத்தால், அமரன் படத்தில் மீதிமுள்ள காட்சிகளில் நடித்துவிட்டு வருகிறேன் என்று சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸிடம் அனுமதி கேட்டு உள்ளார். சில வாரங்களுக்கு முன் ஓகே சொன்ன ஏஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனுக்கு முற்றிலுமாக அனுமதி தர மறுத்து விட்டார்.

இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் புதிய உடல் மொழியில் சிவகார்த்திகேயனை அவர் நடிக்க வைத்து வரும் நிலையில், அவர் அமரன் படத்தில் நடிக்க சென்றால், அங்கு ராணுவ அதிகாரி கேரக்டரில் வழக்கமான உடல் மொழியில் நடிப்பார். அங்கு அதுபோல் 20 நாட்கள் நடித்துவிட்டு, மீண்டும் வரும்போது இந்த படத்தில் பழையபடி நடிக்க ஆரம்பித்து விடுவார் என்பதால் அதற்கு ஏஆர் முருகதாஸ் அனுமதிக்கவில்லை. இதனால் அமரன் படப்பிடிப்பை முடிக்க முடியாமல், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தவித்து வருகிறது.

- Advertisement -

சற்று முன்