- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுசை தொடர்ந்து இயக்குனராக ஆசைப்படும் பிரபல நடிகர்... அவரது முதல் படமே எப்படி இருக்கும் தெரியுமா...

தனுசை தொடர்ந்து இயக்குனராக ஆசைப்படும் பிரபல நடிகர்… அவரது முதல் படமே எப்படி இருக்கும் தெரியுமா…

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் மட்டுமல்லாமல் இயக்கம் தயாரிப்பு பாடல் பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் தனுஷ். ப பாண்டி திரைப்படம் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமானார். முதியோர் தங்கள் வாழ்வில் இளமையான காதலை நினைத்துப் பார்க்கும் அழகான தருணத்தை படமாக எடுத்து நம்மை அசர வைத்திருந்தார் தனுஷ். இவரைத் தொடர்ந்து இரண்டாவது ஆக தனது ஐம்பதாவது திரைப்படத்தை அவர் இயக்கி நடித்து முடித்துள்ளார்.

இதில் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, சந்திப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பால முரளி உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். வட சென்னையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து, தற்போது மூன்றாவது முறையாக ஒரு படத்தை தனுஷ் இயக்கி வருகிறார். இளைஞர்களின் காதலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது.

- Advertisement -

இதனை தனுஷின் வொண்டர் பார் நிறுவனமே தயாரிக்கிறது. படத்திற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் தனுசை தொடர்ந்து சிவகார்த்திகேயனும் தனக்கு இயக்கத்தின் மேல் ஆசை இருப்பதாக கூறியுள்ளார். அவர் நடிப்பில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்த அயலான் திரைப்படம் தற்போது பொங்கலுக்கு வெளியாகிறது.

இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், இந்த திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு பொங்கலுக்கு ரெடி ஆகி உள்ளது. நான் போட்டியை எப்போதுமே நம்புவதில்லை. எனக்கு அது தேவையுமில்லை. நான் குழந்தையாக இருக்கும்போது அதிகமாக கார்ட்டூன் பேண்டஸி படங்களை பார்ப்பேன். இந்த ஜானரில் தமிழில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று விரும்பினேன்.

- Advertisement -

அயலான் படத்தின் டிரைலர் டீசரை விட நன்றாக இருக்கும். நீங்கள் அத்தனை பேரின் உழைப்பையும் நன்றாக பார்ப்பீர்கள். இந்த மேடையில் தயாரிப்பாளர் கே ஜே ஆர் பேசியதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பொங்கலுக்கு ரிலீசாகும் கேப்டன் பில்லர் லால் சலாம் மற்றும் மிஷன் 1 திரைப்படங்களும் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன் என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் அவர், திரைப்படத்தை இயக்குவதில் திட்டம் உள்ளது. ஆனால் இப்போதைக்கு நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும். சவாலான கதாபாத்திரங்களின் நடிக்க வேண்டும் என்பதே ஆசை. ஆனால் நிச்சயமாக ஒரு திரைப்படத்தை நான் இயக்குவேன். ஒன்று நல்ல பீல் குட் திரைப்படமாக இருப்பேன் அல்லது முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படத்தை இயக்குவேன் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்