- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் அந்த புராஜெக்டை கையில் எடுத்த டைரக்டர் ராஜமௌலி, யாருமே எதிர்பார்க்காத தரமான சம்பவம் -...

மீண்டும் அந்த புராஜெக்டை கையில் எடுத்த டைரக்டர் ராஜமௌலி, யாருமே எதிர்பார்க்காத தரமான சம்பவம் – உடல் பருமன் நாயகிக்கு மீண்டும் வாய்ப்பா?

- Advertisement -

தென்னிந்திய சினிமா வரலாற்றில் சில படங்கள் சரித்திரம் முக்கியத்துவம் பெற்ற படங்களாக அமைந்து விடுகின்றன. அதே நேரத்தில் சரித்திர நாவல்கள், புதினங்கள் போன்றவை தமிழில் படங்களாக எடுக்கப்பட்டதற்கு காரணம் படத்தின் தன்மையை, முழுமையாக படத்தில்சொல்லி விட முடியாது என்பதால் தான்.

குறிப்பாக பெரிய இதிகாசங்கள், பெரிய புராணங்கள், மிக பிரபலமான, மக்களின் அபிமானம் பெற்ற நாவல்கள் போன்றவற்றை படமாக எடுக்க பலரும் முயற்சித்தாலும், ஒரு நாவலை, ஒரு மிகப்பெரிய புதினத்தை, ஒரு இதிகாசத்தை இரண்டரை மணி நேர படத்தில் காட்சிப்படுத்தி சொல்லிவிட முடியாது என்பதாலேயே அந்த முடிவை தள்ளி வைத்தனர்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அவர் நடிப்பில் உருவாக்க ஆசைப்பட்டார். ஏனெனில் பொன்னியின் செல்வன் நாவலை அவர் மிகவும் விரும்பி படிப்பார். ஆனால் ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வனை கதையை ஒரு படத்தில் எப்படி எடுக்க முடியும் என்பதால் அவர் அந்த முயற்சியை தள்ளி வைத்தார்.

அதற்கு பிறகு நடிகர் கமல்ஹாசனுக்கும் அப்படி ஒரு விருப்பம் இருந்தது. ஆனால் அதை இரண்டு பாகம் மூன்று பாகமாக எடுக்க அவர்களால் யோசிக்கக்கூட முடியவில்லை. இந்த சூழ்நிலையில் பாகுபலி என்ற படத்தை ராஜமௌலி இயக்கினார். இந்த படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், ரானா ரகுபதி, நாசர், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பாகுபலி படம் இரண்டு பாகங்களாக வந்து வெற்றி பெற்ற பிறகு, பலரும் துணிச்சலாக இரண்டு பாகங்களாக படத்தை எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், இப்போது நிறைய படங்கள் இரண்டு பாகங்களாக வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக சுந்தர் சி அரண்மனை அரண்மனை 2 அரண்மனை 3, அரண்மனை 4 வரை வந்துவிட்டார். அடுத்து அரண்மனை 5 எடுக்கவும் தயாராக இருக்கிறார். அதே போல் கலகலப்பு, கலகலப்பு 2 எடுத்தவர், கலகலப்பு 3 எடுக்கவும் தயாராகி விட்டார்.

தற்போது பாகுபலி படத்தின் 2 பாகங்களை இயக்கிய டைரக்டர் ராஜமௌலி, 3ம் பாகம் எடுக்க முடிவு செய்து விட்டார். இப்போது மகேஷ்பாபு நடிக்கும் படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார். அதேபோல் நடிகர் பிரபாஸ் வேறு சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இருவரும் தங்களது கமிட்மெண்டை முடித்த பிறகு, பாகுபலி 3 படத்தை எடுக்க உள்ளனர். இந்த படத்தில் மீண்டும் பிரபாஸ் அனுஷ்கா ஜோடியாக நடிப்பார்களா? தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் போன்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சற்று முன்