- Advertisement -
Homeபொழுதுபோக்குமாபெரும் வெற்றி கண்ட மாவீரன்... ஒட்டுமொத்த வசூல் மட்டும் இத்தனை கோடிகளா?... படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ...

மாபெரும் வெற்றி கண்ட மாவீரன்… ஒட்டுமொத்த வசூல் மட்டும் இத்தனை கோடிகளா?… படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

- Advertisement -

டாக்டர், டான் என அடுத்தடுத்த இரண்டு வெற்றிகளை கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு, பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வியை கொடுத்தது. படம் வெளியான ஒரு வாரத்திலேயே, பல திரையரங்குகளில் பிரின்ஸ் திரைப்படம் நீக்கப்பட்டதால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை இந்த படம் சற்று அசைத்துப் பார்த்தது. இதனால் அடுத்த படத்தை தேர்வு செய்வதில் மிக கவனமுடன் இருந்தார் சிவகார்த்திகேயன்.

இந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத விதமாக, இயக்குனர் மடோனா அஸ்வினுடன் அவர் கூட்டணி வைத்தார். யோகி பாபுவை கதையின் நாயகனாக வைத்து, அஸ்வின் இயக்கிய மண்டேலா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களத்தில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டதால் ரசிகர்கள் இதனை கொண்டாட, மடோனா அஸ்வினும் மண்டேலா மூலம் இரண்டு தேசிய விருதுகளை பெற்றார்.

இதனிடையே சிவகார்த்திகேயனுடன் மடோனா அஸ்வின் எடுத்த மாவீரன் திரைப்படம் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியானது. இதில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர், இயக்குனர் மிஷ்கின், சரிதா, சுனில், யோகி பாபு, மோனிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஆற்றின் கரையோரம் குடிசைப் பகுதியில் வாழும் மக்களை, அடுக்குமாடி குடியிருப்புக்கு அரசு அழைத்துச் செல்ல, தரமற்ற அந்தக் கட்டிடத்தில் வாழும் மக்களின் நிலை குறித்தும், அதிலேயே கதாநாயகன் இருந்தால் எப்படி இருக்கும் என்பதையும் சற்று விரிவாகச் சொல்லி இருந்தார் மடோனா அஸ்வின். கோழையான ஒரு இளைஞர், உயிருக்கு பயந்து ஒவ்வொரு விஷயத்திலும் தள்ளி நிற்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருந்தார் சிவகார்த்திகேயன்.

கோழையான இளைஞர் வீரனாக மாறினால் எப்படி இருக்கும் என்ற ஒற்றை வரி தான் படத்தின் திரைக்கதை என்றாலும், இரண்டாம் பாதியில் அதை காட்சிப்படுத்திய விதம் சற்று தொய்வாக இருந்ததாக சினிமா விமர்சகர்கள் கருத்து கூறினர். இருப்பினும், விஜய் சேதுபதியின் பின்னணி குரல் இதுவரை இல்லாத வித்தியாசமான அனுபவத்தை கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.

யோகி பாபுவின் ஒன்லைன் காமெடி, சிவகார்த்திகேயனின் யதார்த்தமான நடிப்பு ஆகிய இரண்டும் படத்தைக் காப்பாற்ற மாவீரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் வாரத்திலேயே படம் வசூலை குவித்ததால், மாவீரன் வெற்றி திரைப்படமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒட்டுமொத்தமாக அந்த திரைப்படம் 89 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 35 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட மாவீரன் திரைப்படம், மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சற்று முன்