- Advertisement -
Homeபொழுதுபோக்குபோடு... அந்த கிரிக்கெட் வீரர் படத்தில் எஸ்.கே நடிப்பது உறுதியாகி போச்சாமே... இதற்கு இயக்குனர் யாரு...

போடு… அந்த கிரிக்கெட் வீரர் படத்தில் எஸ்.கே நடிப்பது உறுதியாகி போச்சாமே… இதற்கு இயக்குனர் யாரு தெரியுமா?…

- Advertisement -

சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரையில் சென்று சாதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் வசூலை குவித்தது. விமர்சன ரீதியாக இது கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வித்தியாசமான கதைக்களம், யோகி பாபுவின் அசத்தலான காமெடியால் மாவீரனுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்தது.

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியுடன் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே கெளதம் கார்த்திக்கை வைத்து ரங்கூன் படத்தை கொடுத்திருந்தார். இந்த நிலையில், எஸ் கே, ராஜ்குமார் பெரியசாமி இணைந்திருக்கும் திரைப்படம் ராணுவ பின்னணியில் எடுக்கப்படுகிறது.

- Advertisement -

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில், சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறாராம். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது.

அடுத்த கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் டைட்டில்லை தீபாவளியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதற்கு பிறகு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன். தளபதி விஜய்க்காக அவர் எழுதியிருந்த கதை நடைபெறாமல் போனதால், அதனையே சிவகார்த்திகேயனுக்கு முருகதாஸ் எடுப்பதாக தெரிகிறது. இதற்கான போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் தொடங்கியுள்ளன.

- Advertisement -

இதன்பிறகு எஸ் கே மீண்டும் டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தியுடன் இணையப் போவதாக தகவல் கசிந்துள்ள நிலையில், மற்றொரு முக்கியமான தகவலும் பேசப்பட்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான வேக பந்து வீச்சாளர் நடராஜனின் பயோபிக் திரைப்படத்தில் எஸ்.கே. நடிப்பதாக இருந்த நிலையில், தற்போது கிட்டத்தட்ட அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனா, நெஞ்சுக்கு நீதி திரைப்படங்களை இயக்கிய அருண்ராஜா காமராஜ்தான் இதனை இயக்க இருக்கிறாராம். தற்போது அவர் நடிகர் ஜெய்யை வைத்து லேபிள் எனும் வெப் சீரிஸை இயக்கியுள்ளார். இந்த நிலையில், சிவகார்த்தியன் தனது அடுத்தடுத்த கமிட்மென்ட்களை முடித்த பிறகு, நடராஜன் படத்தில் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்