- Advertisement -
Homeபொழுதுபோக்குஎதிர்காலத்துல நீ கண்டிப்பா கட்சி ஆரம்பிப்பே… தன் பேரனை வைத்து நடிகர் விஜயை கலாய்த்த சீனியர்...

எதிர்காலத்துல நீ கண்டிப்பா கட்சி ஆரம்பிப்பே… தன் பேரனை வைத்து நடிகர் விஜயை கலாய்த்த சீனியர் நடிகர் எஸ்வி சேகர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சீனியர் நடிகராக இருப்பவர் எஸ்வி சேகர். தனது நாடக பிரியா நிறுவனம் மூலம் பல ஆயிரக்கணக்கான மேடை நாடகங்களை அரங்கேற்றியவர். காமெடி நடிப்பில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். குறிப்பாக விசு படங்களில் எஸ்வி சேகர் அதிகளவில் நடித்திருக்கிறார். இப்போதும் தமிழ் சினிமாவில் அப்பா கேரக்டரில் எஸ்வி சேகர் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் அவர் கலைஞர் டிவியில் ஒரு டிவி சீரியலிலும் நடித்திருந்தார். அரசியல் ஆர்வம் கொண்ட நடிகர் எஸ்வி சேகர் அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளிலும் இருந்தார். இப்போது திமுக ஆதரவாளராக இருந்து வருகிறார். பாஜக குறித்து அவ்வப்போது கடும் விமர்சனங்களை முன்வைக்கிறார். சமீபமாக தவெக கட்சித் தலைவர் விஜயையும் விமர்சிக்க துவங்கியிருக்கிறார்.

- Advertisement -

நடிகர் விஜய் சமீபத்தில் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்தினார். பல லட்சக்கணக்கான மக்கள் திரண்ட அந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலினை அங்கிள் அங்கிள் என அழைத்துப் பேசி கலாய்த்தார். இதுகுறித்து இப்போது நடிகர் எஸ்வி சேகர் வீடியோ ஒன்றின் மூலம் மறைமுகமாக விமர்சனம் செய்திருக்கிறார்.

அந்த வீடியோவில் நடிகர் எஸ்வி சேகர், தனது பேரன் ஆர்யன் அஸ்வினுடன் உரையாடுகிறார். அப்போது தனது பேரனிடம், தம்பி உம் பேர் என்ன என்று எஸ்வி சேகர் கேட்கிறார். அதற்கு முரளி மாமா என்று ஆர்யன் அஸ்வின் சொல்கிறார். உன் பேரே முரளி மாமாவா என்று எஸ்வி சேகர் கேட்கிறார். இல்லே நான் முரளி, நீங்க மாமா என்று சிறுவர் பதில் சொல்கிறார்.

- Advertisement -

அதற்கு எஸ்வி சேகர், அடாடடா… இந்த வயசுலேயே உறவை சொல்லி கூப்பிடுறே. பிற்காலத்துல நீ கட்சி ஆரம்பிச்சு நீ பெரிய ஆளா ஆயிடுவியே? சூப்பர்டா… நீ கட்சி ஆரம்பிப்பேடா என்று எஸ்வி சேகர் பேசுகிறார். அதாவது நடிகர் விஜய், முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என அழைத்ததை தான் இப்படி வீடியோ மூலம் எஸ்வி சேகர் கலாய்த்திருக்கிறார்.

நடிகர் விஜய் தமிழக முதல்வர் ஸ்டாலினை அங்கிள் வெரி ராங்க் அங்கிள் என்று மதுரை தவெக மாநாட்டில் பேசியது பெரிய அளவில் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதே நேரத்தில் ஒரு கூட்டத்தில் ஒரு சிறுமி, ஸ்டாலின் தாத்தா என்று மைக்கில் கூற அதற்கு பதிலளித்த ஸ்டாலின், ஸ்டாலின் தாத்தா இல்லே மாமா என்று அவரே சிரித்தபடி சொல்லியிருப்பதும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்