- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் சேதுபதியின் முரட்டுத்தனமான 'ஹிட்' பட இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்... போடு! வெயிட்டிங்கே வெறி ஆகுதே...

விஜய் சேதுபதியின் முரட்டுத்தனமான ‘ஹிட்’ பட இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்… போடு! வெயிட்டிங்கே வெறி ஆகுதே…

- Advertisement -

அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடுத்ததாக இரண்டு திரைப்படங்கள் ரெடியாகி வருகின்றன. இதில் ஒரு திரைப்படம் ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருக்கும் மதராசி. இதன் படப்பிடிப்பு 2023 ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது. அதன் சூட்டிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே முருகதாஸுக்கு, பாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்ததால் அங்கு சென்று விட்டார்.

அங்கு சல்மான் கானை வைத்து அவர் சிக்கந்தர் என்னும் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அது படுதோல்வியை சந்தித்தது. இந்த இடைவேளையில் சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா உடன் கைகோர்த்தார். அவரது 25வது படமாக அது எடுக்கப்பட்டது. இதற்கு பராசக்தி என பெயர் வைத்தார்கள்.

- Advertisement -

சூர்யாவுடன் சுதா எடுக்க இருந்த புறநானூறின் கதையே, சிவகார்த்திகேயனிடம் சென்றது. இதில் வில்லனாக ரவி மோகன் நடித்திருக்கிறார். அதர்வா ஸ்ரீ லீலா உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள். சென்னை சிதம்பரம் காரைக்குடி இலங்கை உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த சமயத்தில் அதன் ஷூட்டிங் பணிகள் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டன.

தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே, படத்தின் பணிகள் தள்ளி வைக்கப்பட்டு இருக்கின்றன. இதன் காரணமாக மீண்டும் மதராசி திரைப்படத்தில் கவனம் செலுத்த சென்று விட்டார் சிவகார்த்திகேயன். தற்போது அதன் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்ற முடிந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து விரைவில் பராசக்தி படத்தின் சூட்டிங் பணிகளும் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு அடுத்ததாக, குட் நைட் திரைப்படத்தை எடுத்த விநாயக் உடன் கைகோர்க்கிறார் சிவகார்த்திகேயன். இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் பற்றிய தகவலும் கசிந்திருக்கிறது. விஜய் சேதுபதி மற்றும் மாதவன் ஆகியோரை வைத்து விக்ரம் வேதா எனும் மாஸ் திரைப்படத்தை கொடுத்த புஷ்கர் காயத்ரியுடன்தான் சிவகார்த்திகேயன் கைகோர்க்க இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது. இதனை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்