- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தில் அடுத்ததாக இணைந்த முக்கிய பிரபலம்... தற்போது சூட்டிங் எந்த ஊரில் நடைபெறுகிறது...

சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தில் அடுத்ததாக இணைந்த முக்கிய பிரபலம்… தற்போது சூட்டிங் எந்த ஊரில் நடைபெறுகிறது தெரியுமா…

- Advertisement -

சிவகார்த்திகேயனின் 25 வது திரைப்படமாக உருவாகிறது பராசக்தி. இறுதிச்சுற்று சூரரைப் போற்று ஆகிய திரைப்படங்களை இயக்கிய சுதா கொங்கராதான் இதனை எடுத்து வருகிறார். 1965 ஆம் காலகட்டங்களில் நடப்பது போன்று இந்த திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது. முதலில் இந்த திரைப்படத்தின் கதை சூர்யாவுக்கு சென்றது நம் அனைவருக்கும் தெரியும்.

அப்போது இதற்கு புறநானூறு என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. அதனை சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனமே தயாரிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக இந்த கூட்டணி பிரிந்தது.

- Advertisement -

தற்போது சிவகார்த்திகேயனை வைத்து இதற்கான படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் சுதா கொங்கரா. இந்தத் திரைப்படத்தை ஆரம்பிக்கும் போதே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது ரவி மோகனின் பங்களிப்புதான். அவர் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வருகிறார். இது ஒன்றே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

இதுபோக அதர்வா, தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் இடம்பெற்று இருக்கிறார்கள். அண்மையில் வெளியான இதன் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதில் பச்சையப்பன் கல்லூரியில் படத்தின் கதை நகர்வது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன. சென்னையிலேயே அதன் காட்சியை படமாக்கி இருந்தார் சுதா.

- Advertisement -

இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு, சிதம்பரத்தில் நடைபெற்றது. அப்போது ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இப்படி பணிகள் சென்று கொண்டிருக்க பராசக்தி திரைப்படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. குறிப்பாக சிவாஜி ரசிகர்கள் இந்த வலியுறுத்தலை போஸ்டராக ஒட்டி வெளிப்படுத்தினர்.

இது ஒரு பக்கம் இருக்க, தற்போது ஷூட்டிங்கிற்காக காரைக்குடிக்கு சென்று இருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா. அங்கு முக்கியமான சீன்கள் எடுக்கப்படுகிறதாம். அதுபோக படத்தில், பாண்டியராஜன் மகன் பிரித்வி ராஜனும் இடம்பெற்றுள்ளாராம். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் மூலம் பரவலாக பேசப்பட்டார். தற்போது இவருக்கும் கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தை சுதா கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்