- Advertisement -
Homeபொழுதுபோக்குதிரைத்துறையில் கச்சிதமாக காய் நகர்த்தும் சிவகார்த்திகேயன்... அடுத்து எந்த இயக்குனருடன் இணையப் போகிறார் தெரியுமா...

திரைத்துறையில் கச்சிதமாக காய் நகர்த்தும் சிவகார்த்திகேயன்… அடுத்து எந்த இயக்குனருடன் இணையப் போகிறார் தெரியுமா…

- Advertisement -

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து சாதித்த நடிகர்களின் ஒருவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் நகைச்சுவை திரைப்படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த அவர், மெல்ல மெல்ல தன்னை கமர்சியல் ஹீரோவாக காட்டிக் கொண்டார். பிறகு அங்கிருந்து ஆக்சன் கதைகளில் ஈடுபாடு காட்டி இன்று மிகப்பெரிய நடிகராக உயர்ந்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் திரை பயணத்தில் வெற்றி திரைப்படங்களுக்கு இணையாக தோல்வி படங்களும் உள்ளன. ஆனால் அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுக்காமல், இடையிடையே பிளாக்பஸ்டர் வெற்றிகளை தருவதால் தனக்கான இடத்தை அவர் தக்க வைத்திருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வியை சந்திக்க, அடுத்த படம் குறித்து நிதானமாக முடிவு எடுத்த சிவகார்த்திகேயன் மண்டேலா இயக்குனர் மடோனா அஸ்வினுடன் இணைந்தார். எதிர்பார்த்ததைப் போலவே மாவீரன் திரைப்படம் வெற்றி பெற, தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி எடுத்து வருகிறார். ராணுவ பின்னணியை கதைக்களமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. காஷ்மீரில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்ததாக சென்னையில் சூட்டிங் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்தப் படத்திற்குப் பிறகு முருகதாஸ் உடன் சிவகார்த்திகேயன் இணைகிறார். இது விஜய்க்கு வைத்திருந்த கதை என்றும், அவருடன் முருகதாஸ் இணையாமல் போனதால் சிவகார்த்திகேயன் சேர்ந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் மோகன்லாலுக்கும் முக்கிய ரோல் இருக்கிறதாம். இதற்குப் பிறகு சிவகார்த்திகேயன் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

சமீபத்தில் மணிகண்டன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற குட் நைட் திரைப்படத்தின் இயக்குனர் விநாயகர் சந்திரசேகரனுடன்தான் சிவகார்த்திகேயன் இணைய போகிறாராம். இது குறித்த பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறதாம். சிவகார்த்திகேயன் நடித்து நீண்ட நாள் கிடப்பில் இருக்கும் அயலான் திரைப்படம் வரும் பொங்கலன்று வெளியாவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்