- Advertisement -
Homeபொழுதுபோக்குலைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு வந்த புது பிரச்னை, நஷ்டங்களை தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில் இப்படி...

லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு வந்த புது பிரச்னை, நஷ்டங்களை தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில் இப்படி ஒரு சோதனையா? – திடீர் எச்சரிக்கையால் பரபரப்பு

- Advertisement -

ஒரு திரைப்படம் உருவாக முதுகெலும்பாக இருப்பது தயாரிப்பாளர்தான். இயக்குனர் மற்றும் ஹீரோ மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்து பல கோடி ரூபாய்களை அவர்கள் முதலீடு செய்ய முன்வராவிட்டால், பல நல்ல படங்கள் ரசிகர்களின் பார்வைக்கு வராமலேயே போய்விடும். பல படங்கள் உருவாக காரணமே தயாரிப்பாளர்கள்தான்.

ஆனால் தொடர்ந்து படங்கள் பிளாப் ஆகும் பட்சத்தில், தயாரிப்பு நிறுவனங்கள் நஷ்டத்தில் முடங்கிப் போய்விடுகின்றன. வட்டிக்கு கடன் வாங்கி படம் தயாரிக்கும் பல நிறுவனங்கள், படங்கள் தோல்வியால் எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு கடனில் சிக்கி ஒரு கட்டத்தில் படங்கள் தயாரிப்பதையே நிறுத்திவிடுவதும் உண்டு. அப்படி பல தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ் சினிமாவில் காணாமல் போயிருக்கின்றன.

- Advertisement -

லைகா புரடக்சன்ஸ் நிறுவனம், கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தயாரிப்பு நிறுவனமாக பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறது. கத்தி, பொன்னியின் செல்வன் 1 பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2 இந்தியன் 3 வேட்டையன், லால் சலாம், சந்திரமுகி 2, விடாமுயற்சி என பல படங்களை தயாரித்தது லைகா நிறுவனம்தான்.

ஆனால் தமிழ் சினிமாவை வாழ வைக்க லைகா புரடக்சன்ஸ் நிறுவனம், ஒரு கட்டத்தில் தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால், பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இந்தியன் 2 படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்த நிலையில், அது பெரிய அளவில் ஏமாற்றத்தை, நஷ்டத்தை தந்துவிட்டது. லால் சலாம் படமும் பிளாப் ஆகி விட்டது.

- Advertisement -

பொன்னியின் செல்வன் 2, சந்திரமுகி 2 என இந்த படங்களாலும் லைகா புரடக்சன்ஸ் பெருத்த நஷ்டத்தை சந்தித்தது. இனிவர உள்ள வேட்டையன், விடாமுயற்சி படங்களை மட்டுமே லைகா புரடக்சன்ஸ் அதன்பிறகு படங்கள் தயாரிப்பை தொடருமா, இத்துடன் நிறுத்திவிடுமா என்பது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

இதற்கிடையே லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர்கள் தேர்வு, ஆடிஷன் நடப்பதாக போலியாக விளம்பரங்கள் வெளிவருகின்றன. இதுகுறித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், காஸ்டிங் கால்கள், ஆடிஷன்கள் குறித்த அறிவிப்புகள் எங்கள் அதிகாரபூர்வ வலைதள பக்கங்களில் வெளியாகும். இதுபோன்ற போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடும் மோசடி நபர்கள், ஏஜன்சிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.

- Advertisement -

சற்று முன்