- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் சர்வதேச விருதுகளை குறித்த திரைப்படம்... டைட்டில்லே ரொம்ப வித்தியாசமா இருக்கே...

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் சர்வதேச விருதுகளை குறித்த திரைப்படம்… டைட்டில்லே ரொம்ப வித்தியாசமா இருக்கே…

- Advertisement -

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். முதலில் நகைச்சுவை திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த அவர், அடுத்து காதல் படங்களில் நடித்து இப்போது ஆக்சன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

டிவியில் நாம் பார்த்து பழகிய முகம் என்பதால், அவருக்கு குடும்ப ஆடியன்ஸ்களின் சப்போர்ட் மிகப்பெரிய அளவில் உள்ளது. இதன் காரணமாக கடந்த முறை வெளியான அயலான் திரைப்படம் சுமாராக இருந்தாலும், அது வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை படைத்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது அவர் அமரன் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்சன் பாணியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தனது உடல் எடையையும் கூட்டி கட்டுமஸ்தாக சிவகார்த்திகேயன் காட்சியளிக்கிறார். ராணுவ வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கமலஹாசன் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது, தனது 23வது படத்துக்காக ஏ ஆர் முருகதாஸ் உடன் அவர் பணியாற்றி வருகிறார். இதற்கான படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னை பகுதியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பாண்டி பசாரில் இதன் காட்சிகள் படமாக்கப்பட்டன.

நடிப்பு மட்டுமல்லாமல், பாடல் பாடுவது தயாரிப்பது என பல்வேறு பணிகளிலும் சிவகார்த்திகேயன் ஈடுபட்டு வருகிறார். முதன்முதலாக தனது நண்பர், அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் கனா திரைப்படத்தை அவர் தயாரித்திருந்தார். அது திரைப்படமும் பெரிய அளவில் பேசப்பட்டது. அதில் சிறப்பு தோற்றத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து வாழ் என்னும் படத்தை அவர் தயாரித்து இருந்தார். தற்போது சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கொட்டுக்காளி என்னும் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இப்படியான சூழலில் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கு குரங்கு பெடல் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மையப்படுத்தி காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ஏற்கனவே சர்வதேச விருதுகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்