- Advertisement -
Homeபொழுதுபோக்குடாக்டர், டான் திரைப்படங்களுக்கும், மாவீரனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன... மனம் திறந்த சிவகார்த்திகேயன்...

டாக்டர், டான் திரைப்படங்களுக்கும், மாவீரனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன… மனம் திறந்த சிவகார்த்திகேயன்…

- Advertisement -

சிவகார்த்திகேயன் – இயக்குனர் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் அயலான் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. இதில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது. இந்த நிலையில் யூடியூப் சேனலுக்கு சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,

“டாக்டர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஆனது. டான் திரைப்படம் 125 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. எனது கேரியரிலேயே அதிக வசூல் செய்த படமாக அது இருந்தது. மாவீரன் திரைப்படம் 89 கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால் இதில் எது மிகப் பெரிய கமர்சியல் அளவிலான வெற்றி என்று நீங்கள் என்னிடம் கேட்டால், நான் மாவீரன் திரைப்படத்தை தான் கூறுவேன். ஏனென்றால் அது ஒரு சோதனை முயற்சிக்கான திரைக்கதை அம்சம் கொண்ட படம்.

அந்த இயக்குனர் மடோன் அஸ்வினின் முதல் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி இருந்தது. புது இசையமைப்பாளர் புது தயாரிப்பாளர் உடன் அந்தப் படம் களம் கண்டது. அது ஒரு விழா நாளாக கூட இருக்கவில்லை. ஒவ்வொரு படத்திற்கான சிலரின் கருத்து வித்தியாசமாக இருக்கும். அவர்கள் டான் திரைப்படம் வழக்கமான கதைதான் என்று கூறுவார்கள். பிறகு எப்படி அது 125 கோடி ரூபாய் வசூல் செய்தது.

அவர்களே மாவீரன் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டவில்லை என்பார்கள். தம்பி தம்பி… எனக்கு தெரியும் தம்பி. தெரியாமலாம் நாங்க ஒன்னும் இல்ல என்பதே எனது ரியாக்சன் ஆக இருக்கும். மிஸ்டர் லோக்கல், பிரின்ஸ் ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பெரியதாக போகவில்லை. ஆனால் இரண்டு தயாரிப்பாளர்களும் அந்தப் படங்களினால் லாபத்தைதான் பெற்றார்கள்.

என்னுடைய அடுத்த படத்தில் ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்பதே எனது விருப்பமாக இருக்கும். பிரின்ஸ் திரைப்படம் தெலுங்கு இயக்குனர் அனுதீப்பின் தவறு அல்ல. வளர்ந்து வரும் ஹீரோ அதில் நடித்திருந்தால் அது நிச்சயமாக வெற்றி பெற்று இருக்கும். சில திரைப்படங்களின் நான் சரியான சம்பளம் வாங்குவேன். சில படங்களில் சம்பளம் வாங்குவதில்லை. சம்பளத்தை விட மாவீரன், கனா, அயலான் போன்ற படங்களில் யோசனைகள் ரசிகர்களை சேர வேண்டும் என்று நான் நினைப்பேன்.

2023 இல் எனக்கு நிறைய விருப்பமான திரைப்படங்கள் உள்ளன. குட் நைட், ஜோ, யாத்திசை, போர் தொழில், அயோத்தி, பார்க்கிங், டாடா திரைப்படங்களை விரும்பி பார்த்தேன். இந்தப் படங்களின் இயக்குனர்களை நான் சந்தித்தேன். அவர்களுடன் கதை விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுதான் என்னை தற்காலத்திற்கு புத்துணர்ச்சியாக வைப்பதற்கு உதவும். ஆனால் இதில் எந்த கதை, திரைப்படமாக ஆகிறது என்பது எனக்கே தெரியாது” என்று சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

சற்று முன்