- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனியும் என்னால் வருடக் கணக்கில் காத்திருக்க முடியாது - லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன்...

இனியும் என்னால் வருடக் கணக்கில் காத்திருக்க முடியாது – லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எடுத்த அதிரடி நடவடிக்கை!

- Advertisement -

அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான படம் லப்பர் பந்து. கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த படம் வெளியான நிலையில் 2 ஆண்டுகளாக தமிழரசன் பச்சமுத்து அடுத்த படத்தை இயக்காமல் காத்திருக்கிறார். இப்படி சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்கள் ஆண்டுக்கணக்கில் காத்திருப்பது வழக்கமாகி விட்டது.

மாஸ் ஹிட் இயக்குனர்களை உடனே அழைத்து கதை கேட்கும் நட்சத்திர ஹீரோக்கள், அவர்களது படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டு பிறகு தங்களது ஏற்கனவே படங்களை முடித்துவிட்டு தான் இந்த படத்தில் நடிக்க வருகின்றனர். அதனால் அடுத்த படத்தை இயக்க முடியாமல் இயக்குனர்கள் காத்திருந்து நொந்து போகின்றனர்.

- Advertisement -

ஹரீஷ் கல்யாண் அட்டக்கத்தி தினேஷ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி சுவாசிகா கீதா கைலாசம் பாலசரவணன் காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை தொட்ட படமாகும். அதன்பிறகு நடிகர் தனுஷ் நடிக்கும் 56வது படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்க உள்ளார். மதுரையை கதைக்களமாக கொண்டு இந்த படம் உருவாகிறது.

இதற்காக மதுரையில் அலுவலகம் அமைத்து படத்தின் ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளில் தமிழரசன் பச்சமுத்து ஈடுபட்டு வருகிறார். டி55 படத்தில் இப்போது நடித்து வரும் நடிகர் தனுஷ் அந்த படத்தை முடித்து விட்டு டி56 படத்தில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். இன்னும் சில மாதங்களில் இந்த படப்பிடிப்பு துவங்க உள்ளது.

- Advertisement -

லப்பர் பந்து படத்துக்கு பிறகு 2 ஆண்டுகளாக காத்திருந்த இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இனி தனுஷ் படத்துக்கு பிறகும் இப்படி காலத்தை ஹீரோவுக்காக காத்திருந்து வீணாக்க கூடாது என முடிவெடுத்துள்ளார். அவர் தனது 3வது படத்தை இயக்க இப்போதே கமிட் ஆகி விட்டார். இந்த படத்தின் கதாநாயகன் நடிகர் சிவகார்த்திகேயன்தான்.

ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தை டி 56 படத்தை முடித்து விட்டு தமிழரசன் பச்சமுத்து இயக்க உள்ளார். குறிப்பாக நடிகர்கள் தனுஷ் மற்றும் சிம்பு படங்களை இயக்கும் இயக்குனர்களை குறிவைத்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தில் நடிக்கிறார். அந்த வகையில் இப்போது தமிழரசன் பச்சமுத்து இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க கமிட் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்