- Advertisement -
Homeபொழுதுபோக்குசுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்திற்கு புறநானூறு டைட்டில் இல்லையா... இதுதான் பெயரா... சூப்பர்...

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்திற்கு புறநானூறு டைட்டில் இல்லையா… இதுதான் பெயரா… சூப்பர் ட்விஸ்ட் வைத்த சுதா கொங்கரா…

- Advertisement -

இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று ஆகிய இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து சுதா கொங்கரா மீண்டும் சூர்யாவுடன் இணைந்தார். இந்த திரைப்படத்திற்கு புறநானூறு என டைட்டில் வைக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோவும் வெளியானது. அதில் சூர்யாவுடன், துல்கர் சல்மான், விஜய் வர்மா, நஸ்ரியா உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

 

- Advertisement -

சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனமே இந்த திரைப்படத்தை தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்தி மொழிக்கு எதிராக நடைபெற்ற போராட்டமே இந்த திரைப்படத்தின் மையக் கதை என்றும், திருச்சி மற்றும் சிதம்பரம் பகுதிகளில் இதன் சூட்டிங் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

 

- Advertisement -

ஆனால், திடீரென படத்தின் சூட்டிங் தடைபட்டது. சூர்யாவுக்கும் சுதா கொங்கராவுக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபமே இதற்கு காரணம் என்று வெளியே பேசிக்கொண்டார்கள். இருப்பினும் புறநானூறு திரைப்படம் தடைபட்டதற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவுமே வெளியாகவில்லை.

 

இப்படியான சூழலில் தான் தனது படத்தின் கதையை சிவகார்த்திகேயனிடம் கூறினார் சுதா கொங்கரா. நடிகரும் இதற்கு ஓகே சொல்ல தற்போது சிவகார்த்திகேயனின் 25 வது திரைப்படமாக இது எடுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் புறநானூறு படத்தில் நடித்த நடிகர் நடிகைகளையும் ஒரே அடியாக கலைத்தார் சுதா கொங்கரா.

 

ஜெயம் ரவி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும், அதர்வா மற்றும் தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா ஆகியோர் இடம் பெற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. Dawn பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறது. அண்மையில் இது தொடர்பான படப்பிடிப்பு பூஜை படங்கள் இணையத்தில் வைரல் ஆகின. இதன் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில் படத்திற்கு புறநானூறு என டைட்டில் வைக்க முடியாதாம். ஏனென்றால் அதன் டைட்டிலுக்கான என்ஒசியை சூர்யாவின் 2டி நிறுவனம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதனால் படத்திற்கான தலைப்பை மாற்றி இருக்கிறார் சுதா. அதற்கு 1965 என்று அவர் பெயர் வைத்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் இந்த திரைப்படம் இயக்கப்படுவதால், இதற்கு இப்படி ஒரு தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

- Advertisement -

சற்று முன்