- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவர் படத்திற்காக, சிவகார்த்திகேயனை உள்ளே இருக்கிறாரா லோகேஷ் கனகராஜ்... விரிவான தகவல் இதோ...

தலைவர் படத்திற்காக, சிவகார்த்திகேயனை உள்ளே இருக்கிறாரா லோகேஷ் கனகராஜ்… விரிவான தகவல் இதோ…

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகக்குறுகிய குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்றவர் லோகேஷ் கனகராஜ். அவருக்கு இந்திய சினிமா அளவில் மிகப் பெரிய மார்க்கெட் இருப்பதால், மோஸ்ட் வான்டெட் இயக்குனராக வலம் வருகிறார். மாநகரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய திரைப்படங்களை எடுத்துள்ளார்.

படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் லோகேஷ், வித்தியாசமான கதைகளத்தை கையில் எடுப்பதாலும், ஒரு படத்தில் இருந்து மற்றொரு படத்தின் தொடர்ச்சியான கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியதாலும் பிரபலமானார். அவரது படத்தில் எப்போதும் சில கதாபாத்திரங்களை ரசிகர்கள் விரும்பும் படியாக செய்தார். உதாரணத்திற்கு மாநகரம் திரைப்படத்தில் சந்திப் கிஷன் கதாபாத்திரத்தை கூறலாம்.

- Advertisement -

இதே போல் கைதியில் தில்லி கதாபாத்திரம் ஆகட்டும், மாஸ்டரில் விஜய்யின் ஜேடி ரோல், விக்ரமில் சில நிமிடங்களை வந்து போன ரோலக்ஸ் கதாபாத்திரம் என ஒவ்வொரு படைப்புகளும் கவரும்படி அமைத்திருந்தார். சமீபத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் விஜயின் கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக முதல் பாதியில் விஜய் நடிப்பு அசத்தலாக இருந்ததாக பலரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியுடன் தனது அடுத்த படம் குறித்து கவனம் செலுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவு மாஸ்டர்கள் சண்டை பயிற்சியாளராக இடம்பெற்றுள்ளனர். இதற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி திருவனந்தபுரம் மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. தற்போது சென்னையில் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு லோகேஷ் கனகராஜ் படத்தில் ரஜினியை இணைகிறார்.

அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இதன் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எல் சி யூ வில் இல்லை என்றும், படத்தில் இடம் பெறும் நட்சத்திரங்கள் உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும் என்றும் ஏற்கனவே லோகேஷ் கூறியிருந்தார். இப்படியான சூழலில் தற்போது இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மிக முக்கியமான ரோலை லோகேஷ் வைத்திருக்கிறாராம். தன்னை எப்போதும் தீவிர ரஜினி ரசிகனாக காட்டிக் கொள்ளும் சிவகார்த்திகேயன், தற்போது அவருடன் இணைந்து இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்