- Advertisement -
Homeபொழுதுபோக்குபோடு வெடிய, தனுஷை ஓரங்கட்டி முன்னேறிய சிவகார்த்திகேயன், கேப்டன் மில்லரை அடித்து நொறுக்கிய அயலான் -...

போடு வெடிய, தனுஷை ஓரங்கட்டி முன்னேறிய சிவகார்த்திகேயன், கேப்டன் மில்லரை அடித்து நொறுக்கிய அயலான் – தரமான சம்பவமா நடந்துருச்சே பாஸ்?

- Advertisement -

விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து அது இது எது என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தவர் சிவகார்த்திகேயன். அவ்வப்போது நடிகர், நடிகைகளை நேர்காணல் செய்வார். சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் மேடையில் நிகழ்ச்சியை இருவரில் ஒருவராக தொகுத்து வழங்குவார்.

ஆனால் அந்த நிகழ்வுகளில் கூட சிவகார்த்திகேயனின் தனித்தனிமை வெளிப்படும். ரஜினி, சாலமன் பாப்பையா போல குரலை மாற்றி பேசி மிமிக்ரி செய்வார். விழா மேடைகளில் டைமிட் ஜோக்கடிப்பார். எப்படியும் அவரது நிகழ்வில், சில நிமிடங்களாவது பார்வையாளர்களை தன்வசப்படுத்தி விடுவார்.

- Advertisement -

அவரது தனித்துவத்தை புரிந்துக்கொண்ட இயக்குநர் பாண்டிராஜ், மெரினா படத்தில் சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து 20 படங்களுக்கு மேல் நடித்துள்ள சிவகார்த்திகேயன், இன்று முன்னணி நட்சத்திர நடிகராக டாப் லெவலில் இருக்கிறார். இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடித்த அயலான் படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது.

அதேபோல், நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படமும் வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது. அயலான், கேப்டன் மில்லர் என இந்த இரண்டு படங்களும்தான் பொங்கல் பண்டிகைக்கு நேரடியாக மோதிக்கொள்ளும் படங்களாக இருக்கின்றன. லால் சலாம் படமும் ரிலீஸ் ஆகிறது. இதில் ரஜினிகாந்த் கேமியோ ரோல் செய்திருக்கிறார்.

- Advertisement -

துவக்கத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன் இருவருமே நண்பர்களாக இருந்த நிலையில், ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் தாறுமாறாக உயர்ந்தது தனுஷூக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. தனுஷ் ரசிகர்களில் பலரும், சிவகார்த்திகேயனின் ரசிகர்களாக மாறியது, தனுஷை கடுப்பேற்றியது. இமான் விவகாரத்தில் கூட, சமூகவலைதளங்களில் பிரச்னையை அதிகமாக்கியது தனுஷ்தான் என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

இந்நிலையில் பொங்கல் ரிலீஸ் படமான சிவகார்த்திகேயனின் அயலான் படத்துக்கு, தமிழ்நாடு முழுவதும் 40 கோடி ரூபாய்க்கு தியேட்டர் வியாபாரம் நடந்துள்ளது. ஆனால், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்துக்கு 25 கோடி ரூபாய்க்கு மட்டுமே தியேட்டர் வியாபாரம் நடந்துள்ளது. தனுஷ் படத்தை விட, சிவகார்த்திகேயன் படத்தை திரையிட தியேட்டர்கள் அதிக ஆர்வம் காட்டியதால், இந்த போட்டியில் ரூ. 15 கோடி அதிக வியாபாரம் நடந்து சிவகார்த்திகேயன் முன்னேறியுள்ளார். தனுஷ் பின்வாங்கியுள்ளார். இது, தனுஷ் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்