- Advertisement -
Homeபொழுதுபோக்குஜாலியான படம் பண்ண தயாரான நடிகர் சிவகார்த்திகேயன், தனது 26வது படத்தில் அந்த இயக்குனருடன் தான்...

ஜாலியான படம் பண்ண தயாரான நடிகர் சிவகார்த்திகேயன், தனது 26வது படத்தில் அந்த இயக்குனருடன் தான் கூட்டணி – ஆனா அவர் வெங்கட்பிரபு இல்லீங்கோவ்!

- Advertisement -

ஒரு அறிமுக நடிகர் தன்னுடைய சினிமா பயணத்தை முன்னேற்ற பாதையில் அமைத்துக்கொள்ள மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். தனது அடுத்த அடுத்த படங்களை உஷாராக தேர்வு செய்து ரசிகர்களுக்கு பிடித்தமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பயணத்தை தொடர முடியும்.

சில நடிகர்கள் சினிமாவுக்குள் வந்த சில படங்களிலேயே காணாமல் போய்விட முக்கிய காரணம், அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்வதில் அவர்கள் காட்டும் அலட்சியமும் அவசரமும்தான். இதில் நடிகர் சிவகார்த்திகேயன் மிக தெளிவாக இருந்து சினிமா ஆட்டத்தில் தனது வெற்றிக்கனிகளை பறித்து வருகிறார்.

- Advertisement -

துவக்கத்தில் காமெடியான காதல் படங்களில் நடித்த அவர் நயன்தாரா சமந்தா ஸ்ரீ திவ்யா கீர்த்தி சுரேஷ் ஹன்சிகா மோத்வானி பிரியா ஆனந்த் பிரியங்கா மோகன் போன்ற முன்னணி நாயகிகளுடன் ஜோடியாக நடித்தார். அதே நேரத்தில் தன் படங்களில் தனது கேரக்டர்களை கவனமாக தேர்வு செய்து நடித்தார்.

ஹீரோ மிஸ்டர் லோக்கல் அயலான் போன்ற சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும் வேலைக்காரன் டாக்டர் மாவீரன் அமரன் போன்ற படங்களின் அடுத்தடுத்த வெற்றியால், இப்போது 75 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு சிவகார்த்திகேயன் இமேஜ் வேற லெவலில் இருந்து வருகிறது.

- Advertisement -

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படம், டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தனது 24வது படம், சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது படம் என அடுத்து வெளியாக உள்ள அவரது படங்கள் பெரிய இயக்குனர்களின் உருவாக்கம் என்பதால் இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அதுவும் சூர்யா நடிக்க புறநானூறு படத்தின் கதையில்தால் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் ஜெயம் ரவி வில்லனாகவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு படத்தில் 2025ம் ஆண்டு இறுதியில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது லேட்டஸ்ட் தகவலாக குட் நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கும் படம்தான் எஸ்கே 26 படம் என்று தெரிய வந்துள்ளது. அவர் சொன்ன கதை மிகவும் பிடித்துபோய் எஸ்கே உடனே ஓகே சொல்லிவிட்டாராம். ஜாலியான படமாக இது இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்