- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவருக்கு நன்றியாக அதை நான் அப்போதோ செய்துவிட்டேன் - நடிகர் சிவக்குமார் சொன்ன உருக்கமான தகவல்!

அவருக்கு நன்றியாக அதை நான் அப்போதோ செய்துவிட்டேன் – நடிகர் சிவக்குமார் சொன்ன உருக்கமான தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1980 90களில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த இந்த நிறுவனத்தின் இயக்குனர் ஏவிஎம் சரவணன். வயது 86 ஆன நிலையில், மூப்பு நிலையில் அவர் இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது உடல் வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

எப்போதுமே வெள்ளை பேண்ட் வெள்ளை சட்டை அணிந்த நிலையில் கைகளை கட்டிக் கொண்டு பவ்யமாக காட்சியளித்தவர் ஏவிஎம் சரவணன். அவரது பணிவும் தன்னடக்கமும் தமிழ் சினிமாவில் பலரையும் வியக்க வைத்திருக்கிறது. படத்தை தயாரிக்கும் முதலாளியாக இருந்தும் அவர் காட்டிய பணிவும் தன்னடக்கமும் எளிதில் அவர் மீது மற்றவர்களுக்கு மரியாதையை ஏற்படுத்தியது.

- Advertisement -

ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை படத்தை தயாரித்தது ஏவிஎம் நிறுவனம்தான். அதே போல் சிவாஜி படத்தை தயாரித்ததும் ஏவிஎம் நிறுவனம்தான். ரஜினி கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்களை தயாரித்தவர் ஏவிஎம் சரவணன். இதில் ரஜினி நடித்த 9 படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்த நிலையில் 9 படங்களுமே வெற்றிப் படங்களாக இருந்தன.

இன்று காலை காலமான ஏவிஎம் சரவணன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். திரைபிரபலங்கள் பலரும் ஏவிஎம் சரவணன் மறைவுக்கு நேரில் வந்து தங்களது அஞ்சலியை செலுத்திய நிலையில் மூத்த நடிகர் சிவக்குமார் மற்றும் மகன் நடிகர் சூர்யாவும் ஏவிஎம் சரவணன் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

- Advertisement -

அப்போது நடிகர் சிவக்குமார் வேதனையை கட்டுப்படுத்த முடியாமல் அழுதபடி இருந்தார். செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவக்குமார் கூறியதாவது, என்னுடைய சொந்த பெயர் பழனிசாமி. அதை சிவக்குமார் என மாற்றியது ஏவிஎம் சரவணன் சார்தான். அதனால்தான் எனது மகன் சூர்யாவுக்கு நான் முதலில் சரவணன் என்று பெயர் வைத்திருந்தேன் என்று சிவக்குமார் அப்போது உருக்கமாக கூறினார்.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு நடிகர் சூர்யாவின் பெயர் சரவணன்தான். நடிகரான பிறகுதான் அவரது பெயர் சூர்யா என மாறியது. பழனிசாமி என்ற தனது பெயரை சிவக்குமார் என்று மாற்றிய ஏவிஎம் சரவணனுக்கு நன்றி சொல்லும் விதமாக, தனது மகனுக்கு நடிகர் சிவக்குமார், சரவணன் என பெயர் சூட்டியிருக்கிறார். அவரது அந்த விசுவாசம் குறித்து ஏவிஎம் சரவணனின் மறைவுக்கு பிறகே இப்போது வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதும் மரியாதைக்குரியது.

- Advertisement -

சற்று முன்