- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் அரசியலுக்கு வரலாமா?, கன்னட நடிகர் சிவராஜ்குமார் உடனே சொன்ன அதிரடி பதில் -...

நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாமா?, கன்னட நடிகர் சிவராஜ்குமார் உடனே சொன்ன அதிரடி பதில் – என்ன சிவாண்ணா இப்படி சொல்லிட்டீங்க?

- Advertisement -

ஜெயிலர் படத்தில் அவர் வந்தது சில காட்சிகளே என்றாலும், வெகு சீக்கிரமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அவரை மிகமிக பிடித்துப் போய்விட்டது. இப்படி பார்த்தவுடன் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் சிலருக்கு மட்டுமே உண்டு. அந்த வகையை சேர்ந்தவர்தான் ரசிகர்களால் சிவாண்ணா என்று அன்பாக அழைக்கப்படுகிற நடிகர் சிவராஜ்குமார்.

இப்போது கேப்டன் மில்லர் படத்தில் சிவராஜ்குமார் நடித்திருக்கிறார். அடுத்து கமல் படம் ஒன்றிலும் அவர் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. அது மணிரத்னம் இயக்கும் படமா, அல்லது எச். வினோத் இயக்கும் படமா எனத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் தொடர்ந்து தமிழ் படங்களில் சிவராஜ்குமார் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

- Advertisement -

தமிழ் சினிமா நடிகர்கள் ஒரு கட்டத்தில் புகழின் உச்சத்தை தொட்டுவிட்டால், அடுத்து அவர்களது நகர்வு சினிமாவில் இருந்து அரசியலாக தான் இருக்கிறது. இது தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என மற்றமொழி சினிமாவிலும் தொடரவே செய்கிறது. அப்படி பல நட்சத்திரங்களை இப்போது அரசியல்வாதியாக நாம் சொல்ல முடிகிறது.

நடிகர் கமல்ஹாசன். மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த், மக்கள் திலகம் எம்ஜிஆர், டி ராஜேந்தர், சரத்குமார், கருணாஸ், கார்த்திக், குஷ்பு, ராதிகா, நடிகை ரோஜா, ஜெயப்பிரதா, சுரேஷ்கோபி, காயத்ரி ரகுராம், நக்மா, நமீதா, சீமான் என பலரை சொல்ல முடியும். அந்த வரிசையில் இப்போது அடுத்து தமிழக அரசியலில் களம் இறங்க இருப்பவர் நடிகர் விஜய்.

- Advertisement -

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய சிவராஜ்குமார், விஜய் நடித்த படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நடிப்பில் அவரது ஸ்டைல் வித்யாசமாக இருக்கும். அவர் ஒரே இரவில் பெரிய ஸ்டார் நடிகராக உருவாகவில்லை. நிறைய உழைத்து, கஷ்டப்பட்டுதான் இந்த உயரத்துக்கு வந்திருக்கிறார். தனது தோற்றம், நடிக்கும் விதம், கதைகள் தேர்வு என எல்லாவற்றிலும் தன்னை செதுக்கி உருவாக்கி கொள்கிறார்.

விஜய், மாணவர்களுக்கு உதவி செய்து பேசும் வீடியோவை பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். அவர் மீது நிறைய நல்ல நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. விஜய் தன்னை மிகவும் நம்புகிறார். அந்த நம்பிக்கையை அவர் மீது அன்பு வைத்திருக்கும் மக்களும் நம்புகின்றனர். நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என்று கேள்வி கேட்கும் மக்கள், அவர் வந்த பின்னால் ஏற்றுக்கொள்கின்றனர். அதற்கான ஆளுமை, வசீகரம் நடிகர் விஜயிடம் இருக்கிறது, என்று விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்று கூறியிருக்கிறார் சிவராஜ்குமார்.

- Advertisement -

சற்று முன்