- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் தண்ணீர் பாட்டில் குறித்த விழிப்புணர்வு இருந்தது, சர்தார் 2 படத்தில் அதே மாதிரியான...

அந்த படத்தில் தண்ணீர் பாட்டில் குறித்த விழிப்புணர்வு இருந்தது, சர்தார் 2 படத்தில் அதே மாதிரியான சில விஷயங்கள் இருக்குது – நடிகர் கார்த்தி சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் கார்த்தி. அவரது படங்களில் மிக மோசமான தோல்வியை தழுவிய படங்கள் என்றால் அது ஜப்பான் வா வாத்தியார் விருமன் மற்றும் மெய்யழகன் போன்ற படங்கள் தான். இதில் மெய்யழகன் படம் விமர்சன ரீதியாக கவனம் ஈர்த்த போதிலும் வசூல் ரீதியாக தோல்வியடைந்த படமாக இருந்தது.

இந்த நிலையில் நடிகர் கார்த்திக்கு சர்தார் 2 படம் மிகப்பெரிய வெற்றியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த படம் சர்தார். இந்த படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து இப்போது மீண்டும் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி சர்தார் 2 என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா நடித்திருக்கிறார். சர்தார் 2 படம் நாளை 10ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் கார்த்தியுடன் நாசர் மாளவிகா மோகனன் ஆஷிமா ரங்கநாதன் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.

சர்தார் 2 படம் குறித்து சென்னையில் நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் நடிகர் கார்த்தி கூறியதாவது, ஒவ்வொரு படத்தில் இருந்தும் நிறைய கற்றுக் கொள்கிறேன். ஒரு படத்தை உருவாக்க பலரது உழைப்பு தேவைப்படுகிறது. சர்தார் 2 படத்தில் சர்தார் படத்தின் முந்தைய கதை பிந்தைய கதையை சொல்லி இருக்கிறோம்.

- Advertisement -

முதல் பாகத்தில் தண்ணீர் தண்ணீர் பாட்டில் விஷயம் விழிப்புணர்வாக பேசப்பட்டது. இந்த படத்திலும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. படத்தை எடுத்து முடித்த பின் ஒரு ஆண்டு எடிட்டிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்சன் பணியில் ஈடுபட்டார் இயக்குனர் மித்ரன். கைதி படத்துக்கு பின் இதில் தான் சாம் சிஎஸ் உடன் நான் இணைந்து இருக்கிறேன்.

அவர் இசையில் வரும் நூறாவது படம் எது என்பது மகிழ்ச்சி. ஆர்ட் டைரக்டர் ராஜீவன் அந்த கால விஷயங்களை படத்தில் கொண்டு வந்து இருக்கிறார். இந்த படத்துக்காக பலர் இரவு பகலாக கொஞ்ச நேரம் மட்டுமே தூங்கி வேலை செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கும் அதை பொறுத்துக் கொண்டு அவர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி என்று நடிகர் கார்த்தி அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்