- Advertisement -
Homeபொழுதுபோக்குலப்பர் பந்து படத்தில் அந்த கேரக்டரில் நடிக்க முதலில் கமிட் ஆனது யார் தெரியுமா? படத்தோட...

லப்பர் பந்து படத்தில் அந்த கேரக்டரில் நடிக்க முதலில் கமிட் ஆனது யார் தெரியுமா? படத்தோட பட்ஜெட்டை விட அதிகமா சம்பளம் கேட்டு மிரட்டி இருக்காரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் அத்தி பூத்தது போல எப்போதாவது மிக நல்ல படங்கள், கதையம்சம்சம் உள்ள சிறந்த படங்கள் வருவதுண்டு. அந்த வரிசையில் காக்கா முட்டை, குட்நைட், சித்தா, பண்ணையாரும் பத்மினியும், மகாராஜா போன்ற படங்களை சொல்லலாம். இப்போது தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான லப்பர் பந்து படமும் அந்த பெயரை பெற்றிருக்கிறது.

கடந்த வாரத்தில் வெளியான இந்த படம் இதுவரை 10 கோடி ரூபாய் வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ் கெத்து தினேஷ் கேரக்டரிலும், ஹரீஷ் கல்யாண் அன்பு என்ற கேரக்டரிலும் நடித்து அசத்தியுள்ளனர். பார்க்கிங் படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாணுக்கு இந்த படம் பெரிய வெற்றியை தந்திருக்கிறது.

- Advertisement -

இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ், வயதான தோற்றத்தில் கேரக்டரில் நடித்திருக்கிறார். அதாவது மாமனராக தினேஷ் நடித்துள்ளார். அவரது மருமகனாக ஹரீஷ் கல்யாண் நடித்திருக்கிறார். திருமணமான பெண்ணுக்கு அப்பாவாக தினேஷ் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

லப்பர் பந்து படத்தில் முதலில் நடிக்க படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து மற்றும் படக்குழுவினர் திட்டமிட்டது நடிகர் எஸ்ஜே சூர்யாவை தான். அவரை நேரில் சந்தித்து இந்த கேரக்டர் குறித்து பேசிய போது, தனக்கு சம்பளமாக அவர் 7 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார். இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 5 கோடி 75 லட்சம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பட்ஜெட்டை விட அதிக சம்பளம் கேட்டு எஸ்ஜே சூர்யா அவர்களை மிரட்டி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் படத்தின் நாயகன் ஹரீஷ் கல்யாண் சம்பளம் ரூ. 70 லட்சம்தான். அதுமட்டுமின்றி இந்த படத்தில் அப்பா கேரக்டரில் வயதானவராக நடிக்கவும் எஸ்ஜே சூர்யா யோசித்திருக்கிறார். நான் இப்போது ஹீரோ கேரக்டரில் நடித்துவரும் நிலையில், இந்த படத்தில் திருமணமான மகளுக்கு அப்பாவாக, ஹீரோவுக்கு மாமனராக நடிப்பதில் உடன்பாடு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகுதான், எஸ்ஜே சூர்யா நடிக்க படக்குழு திட்டமிட்ட அந்த கேரக்டரில் நடிகர் தினேஷ் நடிக்க கமிட் செய்யப்பட்டு, படமும் பலத்த வரவேற்பும், வெற்றியும் பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் சம்பளத்தை பொருட்படுத்தாமல், இந்த நல்ல கேரக்டரில் எஸ்ஜே சூர்யா நடித்திருக்கலாம். இன்னும் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டு இருக்கும். நல்ல வாய்ப்பை, தினேஷூக்கு பறிகொடுத்து விட்டார் என ரசிகர்கள் எஸ்ஜே சூர்யாவை விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்