- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் சின்னக்கவுண்டர் விஜயகாந்தை பின்பற்றிய நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா - அப்போ சர்தார்...

அந்த விஷயத்தில் சின்னக்கவுண்டர் விஜயகாந்தை பின்பற்றிய நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா – அப்போ சர்தார் 2வில் தரமான சம்பவம் காத்திருக்கு…

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக உள்ளே வந்தவர்தான் எஸ் ஜே சூர்யா. அவர் இயக்கிய வாலி படம் அஜீத்குமாருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதே போல் எஸ்ஜே சூர்யா இயக்கிய குஷி படமும் விஜய்க்கு, அவரது சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது. வாலி படத்தில் சிம்ரன், குஷி படத்தில் ஜோதிகா இருவருமே வேற லெவலில் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

துவக்கத்தில் படங்களை இயக்கிய எஸ் ஜே சூர்யா பிறகு படங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார். நியூ, அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி என சில படங்களில் நடித்த அவர், சில சர்ச்சகைளில் சிக்கிய நிலையில், சினிமாவில் இருந்து காணாமல் போனார். அதன்பிறகு மீண்டும் இறைவி படம் மூலம், ரீ என்ட்ரி கொடுத்தார்.

- Advertisement -

அதன்பிறகு மான்ஸ்டர், இசை, ஸ்பைடர், மெர்சல், மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், இந்தியன் 2, ராயன் என வில்லன் கேரக்டரில் தொடர்ந்து அசத்திக்கொண்டு இருக்கிறார் எஸ்ஜே சூர்யா. ரகுவரன், நாசர், பிரகாஷ்ராஜ் வரிசையில் இப்போது வில்லன் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடையாளம் பெற்றவராக மாறியிருக்கிறார் நடிகர் எஸ்ஜே சூர்யா.

வில்லன் கேரக்டரில் தொடர்ந்து ஒரே மாதிரியாக நடிக்காமல் வித்யாசமான கெட்டப்பில், வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தினால்தான் வில்லனாக நீண்ட காலத்துக்கு தாக்கு பிடிக்க முடியும் என்பதால், எஸ் ஜே சூர்யா, தனக்கு பொருத்தமாக உள்ள கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார். அதிலும் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தியும் வருகிறார்.

- Advertisement -

இயக்குனராக இருந்து நடிகராக மாறியவர் எஸ் ஜே சூர்யா என்பதால், அவருக்கு கேரக்டரையும், கதையையும், காட்சியையும் சொல்லி விட்டாலே போதும், நடிப்பதை அவரே பார்த்துக்கொள்கிறார், இயக்குனர்களுக்கு அதிக வேலையோ, சிரமமோ கொடுப்பதில்லை என்பதால் அவரை வில்லனாக நடிக்க வைப்பதில் பல இயக்குனர்கள், ஹீரோக்கள் ஆர்வமாக உள்ளனர்.

இப்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2 படத்தில், வில்லனாக நடிக்கிறார் எஸ்ஜே சூர்யா. இந்த படம் விமான கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் தனது கேரக்டர், கெட்டப்பில் வித்யாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக, சின்னக்கவுண்டர் விஜயகாந்த் போல படிய வாரிய எண்ணெய் தலைமுடி, சோடா புட்டி கண்ணாடி, நெற்றியில் விபூதி, பொட்டு, வெள்ளை வேட்டி சட்டை என, வித்யாசமான கெட்டப்பில் இந்த படத்தில் நடிக்கிறார் நடிகர் எஸ்ஜே சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்